News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.வேணு உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கே.வேணு தி.மு.க.வின் முன்னாள் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். அதோடு கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்தார்.

இந்நிலையில் கே.வேணு திடீர் உடல்நலக்குறைவு குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கே.வேணு மறைவுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கே.வேணுவின் திடீர் மரணம் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link