News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

திமுகவில் இன்னமும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்படவே இல்லை. ஆனால், அதற்குள்ளாக, ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தேர்தல் பரப்புரையை திமுக இன்று தொடங்கிவிட்டது.

மீண்டும் ஆட்சியைப் பிடித்தே தீரவேண்டும் என்பதற்காக திமுக இளைஞர் அணி மாநாடு, மகளிர் அணி மாநாடு என அடுத்தடுத்த மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடத்திவருகிறது. அதோடு ஒவ்வொரு வார்டிலும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை வைத்து நூறு வாக்காளர்களை ஒரு பாகவர் முகவர் கண்காணித்து அவர்களை தி.மு.க-வுக்கு தேர்தல் நாள் அன்று வாக்களிக்க வைக்கும் வேலையை இந்த பாக முகவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் திமுக, தற்போது ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பெயரில் இன்று களத்தில் நேரடியாக தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறது. அதன்படி, திமுக தலைவர் ஸ்டாலினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 நட்சத்திர பேச்சாளர்கள் 234 தொகுதிகளிலும் இம்மாதம் முழுவதும் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

ஒவ்வொரு தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள், மாணவர்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை ஒரே இடத்தில் அழைத்து, மண்டல பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் திமுகவின் பிரசாரத்தை தங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கின்றன. யார் வந்தாலும் வராவிட்டாலும் திமுக தேர்தல் வேலையை பார்த்துக்கொண்டே இருக்கும். நாங்க வைச்சதுதான் சட்டம் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.

அதிருப்தியில் இருந்தாலும் கூட்டணிகள் அமைதி காக்கிறார்கள். கூட்டணி அழைப்புக்கு வெயிட்டிங். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link