News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தி.மு.க.வும், நானும் எதற்கும் பயப்படமாட்டோம் என்று அமைச்சர் எ.வ.வேலு, செய்தியாளர்கள் சந்திப்பின் போது உறுதியாக தெரிவித்தார்.

பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 40 இடங்களில் கடந்த 3ம் தேதி முதல் வருமானவரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 5வது நாளாக நேற்று சோதனை நடைபெற்றது. அதன்படி  எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், ஓட்டல்களிலும், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

அதேபோல் கோவையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினரான மீனா ஜெயக்குமார் என்பவர் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத ரூ.18 கோடி சிக்கியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதேபோல் காசா கிராண்ட் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் 4 நாட்கள் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அப்பாசாமி ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் இருந்து ரூ.250 கோடி மதிப்புள்ள விற்பனை ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் எ.வ.வேலு, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, ‘‘இந்த சோதனையின் மூலம் சமூக வலைத்தளங்களில் எனக்கு எதிராக தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். கடந்த 5 நாட்களாக ஆய்வு என்ற பெயரில் வருமானவரித்துறையினர் ஜல்லடை போட்டு சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் என்னுடைய வீட்டிலும், என்னுடைய மகன்கள் வீட்டிலும் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் அவர்களுக்கு ஒரு பைசா கூட கிடைக்கவில்லை. எனக்கும் எனது மகன்கள் நடத்தும் கல்லூரி நிறுவனங்களுக்கும்  எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும்  எ.வ. வேலு கண்ணீருடன் பேட்டி அளித்தார்.

வருமானவரித்துறை சோதனை என்ற பெயரில் கடந்த 5 நாட்களாக என்னுடைய அலுவல்களையும், அரசு அலுவல்களையும் செய்யவிடாமல் தடுத்துவிட்டனர்.  கடந்த தேர்தலுக்கு முன்பாக வந்த வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டதில் எதையுமே கைப்பற்றாத நிலையில், இந்த முறையும் அதேதான் நடந்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் காசா கிராண்ட், இதுபோன்ற சோதனைகளின் வாயிலாக தி.மு.க.வையோ தி.மு.க.வில் உள்ள அமைச்சர்களையோ மத்திய பா.ஜ.க. அரசு ஒன்றும் செய்துவிட முடியாது. தற்போதைய மோடி தலைமையிலான பாஜக அரசு எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி பார்ப்பதையே வேலையாக வைத்துள்ளது என்று தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link