Share via:
வரும் 2026 தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடப்போகும்
தொகுதிப் பங்கீடு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த பட்டியல் இப்போது
சமூக வலைதளங்களில் பரபரப்பாக உலவுகிறது.
அந்த பட்டியல் படி திமுக 164, காங்கிரஸ் 25, விசிக 6, மதிமுக
6, மார்க்சிஸ்ட் 6, இந்திய கம்யூனிஸ்டு 6, தேமுதிக 6 + (1 ராஜ்யசபா), பாமக (ராமதாஸ்)
4, கொ.ம.க (ஈஸ்வரன்) 3, மக்கள் நீதி மய்யம் 3, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3, மனித
நேய மக்கள் கட்சி 2 என்று இடங்கள் ஒதுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின்றன.
கடந்த தேர்தலில் மதிமுக, கொமக, மமக போன்ற கட்சிகள் உதயசூரியன்
சின்னத்தில் போட்டியிட்டன. இந்த முறை இந்த கட்சிகள் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்புகின்றன.
மேலும் தனியரசு, வேல்முருகன், கருணாஸ், வாண்டையார் போன்ற அமைப்பு
ரீதியான தலைவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்குகிறது திமுக.
கமல்ஹாசன் கட்சி டார்ச்லைட் சின்னத்தில் தான் போட்டியிடும் என்கிறார்கள்.
