News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட விக்கிரவாண்டி தொகுதியில் இம்மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி திடீரென்று உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

 

அதன் அறிவிப்பின்படி வருகிற 10ம் தேதி விக்கிரவாண்டியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணி வேட்பாளராக தேர்தலை சந்திக்கிறார். அ.தி.மு.க. தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்துவிட்டார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் டாக்டர் அபிநயா களம் காண்கிறார்.

 

இந்நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் விக்கிரவாண்டி தொகுதி ஆசாரங்குப்பம் கிராமத்தில், தி.மு.க. கிளை செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான ஏ.சி.ராமலிங்கம் என்பவரின் வீட்டில் வேட்டி, சட்டை, சேலை உள்ளிட்ட பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. 

 

மேலும் அவற்றை பா.மு.க.வினர் கைப்பற்றி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். தேர்தல் விதிகளை மீறி தி.மு.க.வினர் இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

மேலும் தேர்தல் விதிகளை கொஞ்சமும் மதிக்காத தி.மு.க.வினர் பொது மக்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கியதை கண்டித்து அப்பகுதியில் பா.ம.க.வினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மீதமுள்ள பரிசுப் பொருட்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 

 

விக்கிரவாண்டி தொகுதியில் எங்கே தோற்றுவிடப் போகிறோமோ என்ற கவலையில் இருக்கும் தி.மு.க. வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கவும், தேர்தல் விதிகள் மற்றும் நடைமுறைகளை சீர்குலைக்கவும் முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டி பேசினார். மேலும் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கிய தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை உடனடியாக வேட்பாளராக அனுமதிக்காமல் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link