Share via:
நட்சத்திர தம்பதியான சூர்யா ஜோதிகாவுக்கு கடந்த 2006ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 17 வயதில் தியா என்ற மகளும், 14வயதில் தேவ் என்ற மகனும் உள்ளனர். சென்னையில் தந்தை சிவக்குமாருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த இவர்கள், தற்போது மும்பையில் குடிபெயர்ந்துள்ளனர்.
தாய், தந்தை போலவே மகள் தியாவுக்கும் சினிமா மீது அதிக ஆர்வம் உள்ளது என்பது தற்போது நடந்திருக்கும் சம்பவம் மூலம் நிரூபணமாகியுள்ளது.
திரிலோகா இன்டர்நேஷனல் பிலிம்பேர் விருது நடத்திய போட்டியில் கலந்து கொண்ட தியா, ‘லீடிங் லைட்’ என்ற ஆவணப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார். இந்த ஆவணப்படம் திரைக்கு பின்னால் இருக்கும் பெண்களின் கதைகளை பேசும் படம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி லீடிங் லைட் ஆவணப்படத்திற்கு சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இயக்குனர் என்ற இரண்டு பிரிவுகளில் தியாவிற்கு விருது கிடைத்துள்ளது.
இது குறித்த பதிவை சூர்யா மற்றும் ஜோதிகா தங்கள் இன்ஸ்டா பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்துள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சிவக்குமார் குடும்பத்தில் மற்றொரு சினிமா வாரிசு வந்துவிட்டதாக நெகிழ்ச்சியுடனும் பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே தியா பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசு வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.