News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us


லியோ திரைப்படத்தின் முதல் 10 நிமிடத்தை மிஸ் பண்ணாதீர்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் இத்திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.


வருகிற 19ம் தேதி ரிலீசாகப் போகும் திரைப்படம்தான் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய், அர்ஜுன், திரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.


இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.


இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை 1,000 கலைஞர்கள் ஒன்றாக உழைத்துள்ளனர். அந்த உழைப்பு திரைப்படம் ஆரம்பித்த முதல் 10 நிமிடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களும் ரசிகர்களும் திரைப்படம் ஆரம்பிக்கும் முன்னரே சரியான நேரத்தில் படம் பார்க்க அமர்ந்துவிட வேண்டும். அந்த 10 நிமிடத்தை தயவு செய்து மிஸ் பண்ணிவிடாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஏற்கனவே நான் ரெடிதான் வரவா பாடலுக்காக ஒரே நேரத்தில் 2 ஆயிரம் நடன கலைஞர்களை வைத்து படமாக்கியது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link