News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ திரைப்படத்தின் வெற்றிக்காகவும் சிறப்புக்காட்சி அனுமதி குறித்தும் வழிபாடு நடத்த ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து நாளை மறுநாள் (அக்.19) லியோ திரைப்படம் உலகளவில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்திற்கான 4 மணி சிறப்புக் காட்சிக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

 

இருப்பினும் காலை 9 மணிக்காட்சிக்கு பதில் 7 மணி சிறப்புக்காட்சி அனுமதி குறித்து தமிழக அரசு நாளை  (அக்.18) மதியத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து நாளை மதியத்திற்குள் தெரியவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

 

இதற்கிடையில் லியோ திரைப்படத்தின் வெற்றிக்காக கடந்த 5 நாட்களுக்கு முன்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திருப்பதியில் சாமி தரிசனம் செய்து வேண்டிக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக தற்போது ராமேசுவரம் சென்று சாமி தரிசனம் செய்தார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

இம்முறை லியோ திரைப்படத்தின் வெற்றியோடு சேர்த்து சிறப்புக்காட்சிக்கான அனுமதிக்காகவும் லோகேஷ் கனகராஜ் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link