கோவில் ரொம்ப புனிதமான இடம். அங்க கேலி, கிண்டல், கூத்துக்கு இடம் கிடையாது என்ற வழக்கம் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தமிழகத்தில் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.

 

உலகப்புகழ்பெற்ற நடராஜர் கோவில் சிதம்பரத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் ஒன்றாக சேர்ந்து சமீபத்தில் கிரிக்கெட் விளையாடினார்கள். அப்போது விடுதலை சிறுத்தைக் கட்சி நிர்வாகியான இளையராஜா கோவிலுக்கு வந்த நிலையில், தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

 

மேலும் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடலாமா? இது ஆகம விதிக்கு எதிரானது தானே? இதேபோல் அனைவரும் கிரிக்கெட் விளையாட அனுமதிப்பீர்களா? என்று தீட்சிதர்களிடம் கேள்வி எழுப்பினார். அப்போது, இது எங்க கோவில், நாங்க எது வேண்டுமானாலும் செய்வோம். அதை கேட்க நீயார்னு ஒருமையில தீட்சிதர்கள் பேசியதாக தெரிகிறது.

 

 

அதைத்தொடர்ந்து இளையராஜாவை தாக்கிய தீட்சிதர்கள் அவருடைய செல்போனையும் பறித்துள்ளனர். இது குறித்து இளையராஜா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் 5  தீட்சிதர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு  செய்துள்ளனர். இதற்கிடையில் தீட்சிதர்கள் இளையராஜாவின் செல்போனை தீட்சிதர்கள் பிடிடுங்கி மிரட்டும் வீடியோ இயைத்தில் வைரலானது.

 

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். அதாவது சிதம்பரம் கோவில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்த தவறும் இல்லை. கோவில் கருவறையில் கிரிக்கெட் விளையாடினால்தான் தவறு என்று கருத்து தெரிவித்துள்ளார்.

 

கோவிலுக்குள் கிரிக்கெட் விளையாடுவது தவறு. சாதாரண பக்தர்களுக்கே இந்த விதி என்றால், தீட்சிதர்கள் எப்படி விளையாடலாம்? நாளடைவில் சிறுவர்கள், இளைஞர்கள் லுங்கி, பனியனுடன் கோவிலுக்குள் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தால் என்னவாகும் என்று கேள்வி எழுப்புகிறார்கள் பக்தர்கள் மற்றும் பொது மக்கள். இதற்கிடையில் தீட்சிதர்களின் செயலுக்கு எச்.ராஜா ஆதரவாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link