Share via:
திமுகவில் இருந்து ராஜ்யசபா எம்பி தேர்தலுக்கு நான்கு பேர் தேர்வு
செய்யப்பட்டிருக்கிறார்கள். அதாவது இந்து மதத்தில் இருந்து சிவலிங்கம், கிறிஸ்தவ மதத்தில்
இருந்து வில்சன், முஸ்லிம் மதத்தில் இருந்து சல்மா ஆகியோருடன் நாத்திகரான கமல்ஹாசனும்
தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த பட்டியலில் சிவலிங்கம் எப்படி வந்தார் என்று பலரும் ஆச்சர்யப்படுகிறார்கள்.
இதற்கு திமுகவினர், ‘’சேலம் திமுக மாவட்டங்கள் மூன்று. சேலம் மத்திய மாவட்டத்தின் செயலாளராக அமைச்சர் ராஜேந்திரன்
இருக்கிறார். சேலம் மேற்கு ராஜகண்பதி எம்.பி.யாக இருக்கிறார். இப்போது சேலம் கிழக்கு
பகுதிக்கு எஸ்.ஆர். சிவலிங்கம் ராஜ்யசபாவுக்குத்
தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேலத்தின் மொத்த தொகுதிகள்
12களில் ஒன்றே ஒன்றை மட்டுமே தி.மு.க. வென்றது. இந்த தேர்தலில் அந்த நிலை மாற வேண்டும்
என்பதற்காகவே இத்தகைய மாற்றம் என்கிறார்கள்…’’
அதேநேரம், புதிய எம்.பி.க்கள் அனைவரும் முதல்வர் ஸ்டாலின், துணை
முதல்வர் உதயநிதி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார்கள்.
இந்நிலையில் எல்லோரையும் சல்மா சந்திக்கும் போது முக்காடு போடாமல் இயல்பாக சந்தித்திருக்கிறார்.
ஆனால், முஸ்லிம் லீக் கட்சியினரை சந்திக்கும் பொழுது மட்டும் முக்காடு போட்டுக்கொண்டு
நிற்கிறார்.
பெண்ணுரிமை, புரட்சி என்று பேசுவது எல்லாம் வேடமா சல்மா என்று
கேள்வி எழுப்புகிறார்கள்.
அதேநேரம், வில்சனுக்கு மீண்டும் எம்,பி. சீட் கொடுத்திருப்பதற்கு
கிறிஸ்தவர்கள் நன்றி தெரிவித்து இருக்கிறார்கள். ஆர்ச் பிஷப் அந்தோணி சாமி வெளிப்படையாக
நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார். ஓட்டுக்காக நடிக்கும் திமுகவின் போலி வேடம்
கலைகிறது.