Share via:
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கோட்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தியேட்டரில் இருந்தே கலவையான விமர்சனங்கள் வெளிவரத் தொடங்கின.
பிளாக்பஸ்டர், சூப்பர் டூப்பர் என்றெல்லாம் அவரது ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வந்தாலும் விமர்சகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் ரொம்பவே சுமார், படு மொக்கை என்று கூறிவருகிறார்கள்.
குறிப்பாக விஜய்காந்த் மற்றும் வில்லனாக நடிக்கும் விஜய் காட்சிகளின் ஏ.ஐ. உருவாக்கம் சிறப்பாக அமையவில்லை என்பதால் மனதில் ஒட்டவே இல்லை என்கிறார்கள். அதோடு மங்காத்தா படத்தை விஜய்யை வைத்து ரீமேக் செய்திருக்கிறார் என்று வெங்கட் பிரபு மீது கடுமையாக தாக்குதல் நடத்துகிறார்கள்.
இந்த படத்தின் கதை இது தான். தீவிரவாத தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக வரும் விஜய், தான் என்ன தொழில் செய்கிறோம் என்பதை மனைவி சினேகாவுக்கு தெரியாமல் ரகசியமாக வைத்திருக்கிறார். அவர்களுக்கு ஜீவன் என்கிற மகன் இருக்கிறார். இந்நிலையில் சினேகா மீண்டும் கர்ப்பமாகிறார். விஜய்யின் சிறப்பு குழுவில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஜெயராம் ஆகியோர் உள்ளனர்.
.குடும்பத்துடன் தாய்லாந்துக்கு சென்றபோது நடக்கும் சம்பவத்தால் விஜய் வேலை பறிபோகிறது. 17 ஆண்டுகள் கழித்து காட்டும்போது விமான நிலையத்தில் வேலை செய்யும் விஜய்யும் சினேகாவும் பிரிந்து வாழ்கிறார்கள். மகள் சினேகாவுடன் இருக்கிறார். இந்நிலையில் வேலை விஷயமாக ரஷ்யாவுக்கு செல்லும் விஜய் பல ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன மகன் ஜீவனை (இளம் விஜய்) ரஷ்யாவில் பார்க்கிறார் காந்தி. அதன் பிறகு ஆட்டம் சூடுபிடிக்கிறது. ஆனால் அடுத்தது என்னவென்று எளிதில் கணிக்க முடிகிறது. இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட டுவிஸ்ட் வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. கிளைமாக்ஸ் அத்தனை சிறப்பாக எடுபடவில்லை. விஜயகாந்த் காட்சியும் எந்த சுவாரஸ்யமும்
கிளப்பவில்லை.
படம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சூப்பர் ஹிட் இல்லை என்பது உறுதியான பிறகே சீமான் படத்திற்கு ஒரு வாழ்த்து தெரிவித்து அறிக்கை அனுப்பியிருக்கிறார்.
சீமான் அறிக்கையில்,
‘’ ஆருயிர்த்தம்பி, அன்புத்தளபதி
விஜய் அவர்கள் நடித்து, அன்புத்தம்பி
வெங்கட் பிரபு இயக்கத்தில், வெளியாகியுள்ள
தி கிரேட்டஸ்ட் ஆல் டைம் திரைப்படம் பெயருக்கேற்ற
வகையில் இதுவரை தமிழ்த்திரையுலகில் மாபெரும்
வெற்றிபெற்றுள்ள திரைப்படங்களை விடவும் மிகப்பெரிய அளவில்
மக்கள் மனங்களைக் கவர்ந்து மாபெரும்
“வெற்றி” பெற வாழ்த்துகிறேன்’ என்று
கூறியிருக்கிறார்.
கூட்டணி இல்லை என்று விஜய் உறுதியாக இருக்கும் நிலையில், படத்தின் தோல்வியை கிண்டல் செய்வதற்காகவே இந்த பதிவு போட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அடுத்து விஜய் மீது விமர்சனம் வைக்கவும் தொடங்கிவிடுவார் என்று நாம் தமிழர் தம்பிகளே சொல்கிறார்கள்.