Share via:
எந்த குழப்பமும் இல்லாத தெளிவான அரசியல்வாதியாக இருந்த திருமாவளவன்
இப்போது ஒரே தேர்தலில் மோடிக்கும் ராகுல் காந்திக்கும் ஆதரவு தெரிவிக்கும் தில்லுமுல்லு
அரசியல் செய்யத் தொடங்கியிருக்கிறார். 100 கோடி ரூபாய் பேரத்திற்கு திருமாவளவன் விலை
போய்விட்டார் என்று அவர்கள் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மகாராஷ்டிராவில் கடந்த தேர்தலில் உச்சகட்ட ஜனநாயகப் படுகொலை நடந்தது.
மீண்டும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத
திருப்பமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பத்து தொகுதிகளிலும் ராஷ்ட்ரிய ஜனதா தல் கட்சி
பத்து தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது என திருமாவளவன் அறிவித்திருக்கிறார்.
மற்றத் தொகுதிகளில் இந்தியா கூட்டணியை ஆதரிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் நடந்துமுடிந்த ஹரியானா தேர்தலில் சின்னச்சின்ன கட்சிகளை
தனியாக நிற்க வைத்து காங்கிரஸ் கட்சியின் வாக்குகளைப் பிரித்து, தேர்தல் ஆணையம் மூலம்
ஜெயித்தது பா.ஜ.க. இங்கேயும் அதே முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கு இந்தியா கூட்டணியில்
இருந்துகொண்டே திருமாவளவன் துணை போயிருப்பது எல்லோருக்கும் அதிர்ச்சியாக உள்ளது.
ஆதவ் அர்ஜுனா ஏற்பாட்டில் நடந்திருக்கும் 100 கோடி ரூபாய் பேரத்தின்
அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி விலை போயிருக்கிறது என்று அவர்களுடைய கட்சி
வட்டாரத்திலேயே பேசப்படுகிறது. ஏனென்றால் இந்த தேர்தலில் 500 வாக்குகள் வித்தியாசமே
வெற்றி வாய்ப்புகளை தீர்மானிப்பதற்குப் போதும். அதேபோல் 10 முதல் 20 தொகுதிகள் வித்தியாசத்தில்
ஆட்சியைப் பிடித்துவிட முடியும். அதற்கு திருமாவளவன் துணை நிற்கிறார்.
இது குறித்து அரசியல் விமர்சகர்கள், ‘’மகாரஷ்ட்ரா மாநில தேர்தலில்
விசிகவும், ஆர்ஜேடியும் போட்டியிட முடிவு செய்தது கட்சியின் கட்டமைப்பை தங்களின் மாநிலத்தைத்
தாண்டி பரவலாக்கும் முயற்சி என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் மகாராஷ்ட்ராவில்
ஆளும் பாஜக – ஏக்நாத் ஷிண்டே கூட்டணி என்பது மாநில கட்சிகளை ஒடுக்கி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
சிவசேனா, தேசியவாத கட்சிகளை உடைத்து, மாநில உரிமைகளை நசுக்கி உருவாக்கப்பட்ட ஒரு ஜனநாயக
விரோத அரசு! அந்த ஏதேச்சதிகார கூட்டணையை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், இந்திய
தேசிய காங்கிரஸ் கட்சிகள் இந்தியா கூட்டணி சார்பில் களம் காண்கின்றன.
பாஜக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்க வேண்டிய இக்கட்டான இந்த
சூழலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்ற நிலையில், இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டே
விசிகவும்-ஆர்ஜேடியும் இருபது தொகுதிகளில் தனித்து களம் காண்பது இந்தியா கூட்டணியை
உளவியல் ரீதியாக பாதிப்படைய செய்வதுடன், பாஜக எதிர்ப்பு வாக்குகளை சிதறடையச் செய்யும்.
மகாராஷ்டிரா தேர்தலில் முடிந்தவரை இந்தியா கூட்டணியில் இடம்பெற்று
போட்டியிட வேண்டும், அதற்கு சூழல் இல்லையெனில் வீம்புக்காகவோ, வைத்து பெருமைக்காகவோ
வேட்பாளர்களை நிறுத்தாமல், இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்வதே
சிறந்த மற்றும் பண்பட்ட நேர்மையான அரசியல் நகர்வாகும்! கடந்த மாதம் நடந்த ஹரியான மாநில
தேர்தலில் பல தொகுதிகளில் ஆயிரம், இரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ்
தோல்வி அடைந்ததையும், ஆம் ஆத்மி தனித்து நின்று காங்கிரசுக்கு விழ வேண்டிய வாக்குகளை
பிரித்ததாளுமே பாஜக இன்று ஆட்சி அமைத்திருக்கிறது. மகாராஷ்டிராவிலும் அதற்கு திருமாவளவன்
துணை போகிறார்’’ என்கிறார்கள்.
கட்சிக்குப் பணம் முக்கியம் தான். அதற்காக இப்படி செய்யலாமா..?
இதே பாணியில் அடுத்து தமிழகத்தில் 150 தொகுதியில் தி.மு.க. ஆதரவு மீதமுள்ள 100 தொகுதிகளில்
அ.தி.மு.க. ஆதரவு என்ற முடிவு எடுப்பாரா திருமா..?