Share via:
தமிழகத்தை அதிரவைக்கும் திருப்புவனம் அஜித்குமாரின் முழு உடற்கூராய்வு
சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. ஒரு கூலிப்படையினர் கூட இத்தனை கொடூரமாகத் தாக்கியிருக்க
முடியுமா எனும் அளவுக்கு காட்டடித் தாக்குதல் நடந்தேறியுள்ளது.
திருப்புவனம் அஜித்குமாருக்கு வெளியான உடற்கூராய்வு சோதனைப்படி
அவருக்கு தலை முதல் கால் வரை 52 காயங்கள் இருத்திருக்கிறது ! மூளையில் இரத்தக்கசிவு,
இதயத்தில் இரத்தக்கசிவு, கல்லீரலில் இரத்தக்கசிவு, விரல்கள் உடைந்து போயுள்ளன, மண்டையோடு
உடைந்துள்ளது, இரண்டு காதுகளிலும் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.
ஒரு கூலிப்படையால் கூட இப்படியொரு கொலையை செய்ய முடியாது. தமிழக
முதல்வருக்கும் ஆட்சியாளர்களுக்கும் குறைந்தபட்ச மனிதநேயம் இருக்குமென்றால் இதில் சம்பந்தப்பட்ட
அனைவர் மீது பாராபட்சமின்றி நடவடிக்கை எடுங்கள். ஸாரி மன்னிச்சுடுங்க என்று சொல்வதால்
மட்டும் இந்த கறையைப் போக்கிவிட முடியாது.
எப்படி கூலிப்படையை ஏவி கொலை செய்யும் வழக்கில், கூலிப்படையினரை
மட்டுமல்லாமல் அவர்களை ஏவி விட்டவர்கள், உத்தரவிட்டவர்கள், உடந்தையாக செயல்பட்டவர்கள்
என எல்லோரையும் வழக்கில் சேர்த்து நடவடிக்கை எடுக்கப்படுமோ அதே போல் அஜித்குமார் வழக்கிலும்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
போலீஸ் துறையை சீரமைக்க வேண்டிய காலகட்டம் இது. ஒவ்வொரு காவல்
அதிகாரியும் தன்னை ஒரு தாதாவாக நினைத்துக்கொண்டு காட்டுத்தர்பார் நடத்துகிறார்கள்,
இதற்கெல்லாம் முடிவு கட்டவில்லை என்றால் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதைத் தவிர
வேறு வழியில்லை.