Share via:

தாய்லாந்துக்கு சுற்றுலா செல்வோர் அங்கு மசாஜ் தெரபியை எடுக்காமல் வரமாட்டார்கள். அந்த மசாஜ் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக தற்போது இந்தியாவிலும் மெட்ரோ பாலிட்டன் சிட்டிகளில் மசாஜ் தெரபி செய்யப்படுகிறது.
இதனால் அக்டோபர் 5ஆம் தேதி உதான் தானி என்ற பகுதியில் உள்ள ஒரு மசாஜ் பார்லரில் மசாஜ் செய்து வலியை குறைத்துக் கொள்ள சென்றார். அப்போது கழுதது தோள் பட்டையில் வலி குறைந்ததாக சொல்லப்படுகிறது
இந்த நிலையில் இரு நாட்கள் கழித்து சாயதாவுக்கு கழுத்தின் பின்புறத்தில் வலி இருந்தது . இதனால் அவர் வலி நிவாரணி மாத்திரைகளை சாப்பிட்டார். இவருடைய கழுத்து சுளுக்கிக் கொண்டதாகவும் தனது பேஸ்புக் பக்கத்தில் நவம்பர் 6 ஆம் தேதி சாயதா பதிவிட்டிருந்தார்.
பின்னர் 2 வாரங்கள் கழித்து அவர் தோள் பட்டைகளில் வீக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஏற்கெனவே சென்ற மசாஜ் பார்லருக்கே சென்ற சாயதா அங்கு தனது பிரச்சினைகளை கூறி மீண்டும் மசாஜ் செய்து கொண்டார்.
பின்னர் இரு வாரங்கள் கழித்து சாயதாவுக்கு கழுத்து பகுதி குனியவே முடியாத அளவுக்கு அப்படியே நின்றுவிட்டது. இதையடுத்து மீண்டும் அந்த மசாஜ் சென்டருக்கே சென்ற சாயதாவுக்கு, வேறு ஒரு பெண் மசாஜ் செய்து விட்டாராம்.
இதைத் தொடர்ந்து கை விரல்களில் உணர்வின்மை, எரிச்சல், வீக்கம் ஏற்பட்டது. அது போல் வலது காலிலும் வீக்கம் வந்துவிட்டது. அக்டோபர் 30ஆம் தேதி பிபூன்ரக் மருத்துவமனைக்கு கழுத்து வலிக்காக சென்றார். அங்கிருந்து அந்த பெண் நோங்கான் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டு நலமுடன் வீடு திரும்பினார். பிறகு நவம்பர் 18ஆம் தேதி கழுத்து பகுதியானது திருப்பவே முடியாமல் இருந்தது. இதையடுத்து மீண்டும் நவ.22 ஆம் தேதி உதான் தானி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட சாயதாவுக்கு ரத்தம் விஷமாக மாறியதால் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 8ஆம் தேதி இறந்தார்.
அவருடைய பிரேத பரிசோதனை முடிவுகளில் அவர் மசாஜ் செய்ததே இவர் இறப்பிற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் .