மதுரை மாவட்டம் மேலூரில் வேதாந்தா நிறுவனத்திற்குக் கொடுத்திருக்கும் ஏல அறிவிப்பை நிறுத்த வேண்டும் என்று மக்கள் போராடி வந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி எதிர்ப்பு காட்டியிருக்கிறார். மேலும் வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்.

இந்த நிலையில் அக்டோபர் 2023ல் மதுரை மாவட்டத்தில் “டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி வேண்டும்” என்று கடிதம் எழுதி கேட்டது நீங்கள் தானே  என்று ஸ்டாலினை குற்றம் சாட்டி அ.தி.மு.க.வினர் தொடர்ந்து பதிவு போட்டார்கள். எடப்பாடி பழனிசாமியும் ’கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார். அ.தி.மு.க. ஐ.டி. விங் ஆட்கள், ‘’நீங்க கேட்ட அனுமதிப்படி மத்திய அரசு ஏலம் விட்டு, வேதாந்தா நிறுவனம் Successful Bidder-ஆக வரும் வரை காத்திருந்து, பிறகு எதிர்ப்பது போன்று ஒரு கடித கபடநாடகம் வேறு… கேட்ட கேள்விக்கு நேரா பதில் சொல்ல கத்துக்கோங்க! 2022ல் வேலூர் ராசிமலை, கோவை சோமனூர், பெரம்பலூர் ஐயனாபுரம் ஆகிய இடங்களில் தாது இருப்பு குறித்து மத்திய அரசு ஆய்வு செய்ய அனுமதி கொடுத்திருப்பது திமுக அரசு தானே ? Routine ஆய்வுகளை எல்லாம் காட்டி தப்பிக்க முடியும் திமுக-வின் Knee-jerk Reaction நகைப்புக்குரியது. அப்படியென்றால் இந்த இடங்களை எல்லாம் தோண்டி எடுத்து சுரங்கமாக்கி, மக்களை நடுத்தெருவில் நிறுத்த திமுக முடிவு செய்துவிட்டது என்று சொல்லலாமா?’’ என்று தாக்குதல் தொடுத்தனர். இதற்கு சாதகமான சில ஆதாரங்களை வெளியிட்டனர்.

இதற்கு இப்போது தி.மு.க.வினர் பதிலடி கொடுக்கும் வகையில், 2018-19ம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தான் மதுரை, அரிட்டாபட்டியில் ஒன்றிய பாஜக அரசு ஆய்வு செய்ய அனுமதியளித்தது என்று ஆதாரங்களை அள்ளிப் போடுகிறார்கள். இந்த விவகாரத்திற்கு தி.மு.க.வினர், ‘’மதுரை மேலூர் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில் தான் (2018-2019) ஒன்றிய அரசு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக எல்லா வகையான ஆவணங்கள் இருக்கும் போதே எடப்பாடி பழனிசாமி பொய்யான தகவலை பரப்புகிறார்.. இதில் இவர் எதிர்க்கட்சி தலைவர் வேறு..அதுவும்பகலில் ஆய்வு செய்தால் கண்டுபிடித்துவிடுவார்கள் என திருட்டுத்தனமாக இரவோடு இரவாக ஆய்வு செய்திருக்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு.. ’ என்று ஆதாரங்களைப் போடுகிறார்கள்.

ரெண்டு பக்கமும் தில்லுமுல்லு இருக்குது போல… மக்கள் தான் பரிதாபம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link