News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அரசியல் அனுபவம் இல்லாத உதயநிதியை துணை முதல்வராக்கியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு உதயநிதி, ‘எடப்பாடி பழனிசாமி சீனியர்களை ஓரம் கட்டியே முதல்வரானார்’ என்றதற்கு அ.தி.மு.க.வினர் கடுமையான பதிலடி கொடுத்துவருகிறார்கள்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, ‘’ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு செங்கோட்டையன், செம்மலை, திண்டுக்கல் சீனிவாசன், பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற சீனியர்களில் ஒருவர் முதல்வராக வருவார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதற்காக கூவத்தூரில் நடந்த கூத்துக்களை தமிழகமே வேடிக்கைப் பார்த்தது. இந்த சீனியர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு எடப்பாடி பழனிசாமி எப்படி முதல்வர் பதவிக்கு வந்தார்?’ என்று கிண்டலாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு அ.தி.மு.க.வினர் உதயநிதிக்குக் கடுமையான பதிலடி கொடுத்துவருகிறார்கள். ‘’எடப்பாடி பழனிசாமி 4 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர். 2 முறை அமைச்சர் பதவி வகித்தவர். ஒரு முறை எம்.பி.யாக இருந்தவர். கட்சியில் கிளைச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், மாவட்டச் செயலாளர், -வாரியத் தலைவர், -கொள்கை பரப்புச் செயலாளர், தலைமை நிலையச் செயலாளர் என்று படிப்படியாக முன்னுக்கு வந்தவர்.  

உதவா நிதியான உதயநிதி 2018ல் கட்சிக்கு வந்து 2019ல் இளைஞர் அணிச் செயலாளராகி 2021ல் MLA ஆகி 2022ல் அமைச்சராகி 2024 ல் துணை முதல்வர் என்று முடி சூட்டி பதவி வாங்கவில்லை. கருணாநிதி குடும்பத்துக்கு முதல்வர் பதவியை பட்டா போட்டுக் கொடுத்திருக்கிறார்களா..? அப்படி இல்லை என்றால் வேறு ஒருவருக்கு அந்தப் பதவியை விட்டுக்கொடுங்கள் பார்க்கலாம்’’ என்று விமர்சனம் செய்கிறார்கள். உதயநிதிக்கு மட்டுமின்றி முதல்வர் ஸ்டாலினையும், ‘நிர்வாகம் தெரியாத துண்டுச்சீட்டு’ என்று கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link