Share via:
‘முன்னாள் கவர்னர், முன்னாள் தமிழக பா.ஜ.க. தலைவர் என்றாலும் அண்ணாமலையிடம்
அடிபணிந்து நடக்கவில்லை என்றால்…’ எனும் ரீதியில் பா.ஜ.க. வார் ரூம் அட்டாக்கிற்கு
ஆளான தமிழிசையின் காலில் விழுந்து அண்ணாமலை மன்னிப்பு கேட்டதாக பரபரப்பு கிளம்பியிருக்கிறது.
சீனியர்களை அவமானப்படுத்துவதை பொறுக்கொள்ளவே மாட்டேன் என்று முதன்
முறையாக அண்ணாமலை வார் ரூமுக்கு எச்சரிக்கை கொடுத்தார் தமிழிசை. இதையடுத்து தமிழிசை
மீது அட்டாக் அதிகம் நடந்தது. இந்த நிலையில் தான் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில்
அமித் ஷா தமிழிசைக்கு கடுமையான எச்சரிக்கை கொடுத்தார்.
இதையடுத்து தமிழிசை கட்சி மாறப் போகிறார் என்று பேசப்பட்டது. ஆனாலும்,
அமித் ஷா தேர்தல் குறித்து விசாரித்தார் என்று மழுப்பலாக ஒரு ஸ்டேட்மென்ட் மட்டும்
தமிழிசை வெளியிட்டார். இதையடுத்து திடீர் திருப்பமாக தமிழிசை வீட்டுக்கு சென்று அண்ணாமலை
சமாதானம் பேசியதாகவும், காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழிசையை சந்தித்த பிறகு அண்ணாமலை, ‘மாநிலத் தலைவராகத் திறம்படச்
செயல்பட்டவருமான, அக்கா தமிழிசை இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.
தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த
அக்காவின் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து
அளித்துக் கொண்டிருக்கிறது..’’ என்றார்.
அவரிடம் தமிழிசை செளந்தரராஜனிடம் மேடையில் வைத்தே அமித் ஷா கோபமாக
பேசியது குறித்து கேட்டதற்கு, “அமித் ஷா ஜி எப்பவுமே இப்படித்தான்.. ரொம்ப ஃப்ரீயா
பேசிருவாரு” என்று தெரிவித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
அதேநேரம், ‘அண்ணாமலை தமிழிசையிடம் மன்னிப்பு கேட்கவில்லை. காலில்
விழவும் இல்லை. தமிழிசை தான் அண்ணாமலையை சந்திக்க வேண்டும் என்று விரும்பினார். அது
மரியாதையாக இருக்காது என்பதாலே அண்ணாமலை நேரில் சென்றார். இனியும் அண்ணாமலை பற்றியும்
தமிழக பா.ஜ.க. பற்றியும் தமிழிசை செளந்தர்ராஜன் பேசினால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்’’
என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் பதிவிடுகிறார்கள்.
என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது.