Share via:

முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சர்ப்ரைஸ் விசிட்டாக
விஜய் ஆஜராக பிளான் வைத்திருந்தாராம். அப்படி விஜய் ஆஜராகி இருந்தால் ஒட்டுமொத்தக்
கூட்டமும் மிரண்டு போயிருக்கும். அதோடு, அனைத்து மீடியாவும் விஜய்க்கு ஆதரவாக நின்றிருக்கும்.
இந்த நல்ல வாய்ப்பை ஆதவ் அர்ஜூனா தடுத்து நிறுத்தியதாக கட்சிக்குள் ஒரு பஞ்சாயத்து
ஓடுகிறது.
முதல்வர் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த்
பங்கேற்பார் என்று சொல்லப்பட்டுவிட்டாலும், அறிக்கை தயாரானதும் தானே இந்த விபரங்களை
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிவிடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார் விஜய். ஒரு
கட்சிக்கு இரண்டு பேர் அனுமதி உண்டு என்பதல், தலைவர் வந்தால் சிறப்பாக இருக்கும் என்று
புஸ்ஸி ஆனந்த் அதனை வரவேற்றுள்ளார்.
ஆனால் திடீரென ஆதவ் அர்ஜூனா உள்ளே புகுந்து இந்த திட்டத்தை எதிர்த்தாராம்.
தி.மு.க.வினர் வேண்டுமென்றே சிண்டு முடிவார்கள், உங்களை அவமானப்படுத்தி வெளியே அனுப்பிவிடுவார்கள்.
பேசத் தெரியாமல் பேசி மாட்டிக்கொண்டால் கட்சிக்கு அவமானம் ஆகிவிடும். அதனால், ஆனந்த்
போகட்டும். நீங்கள் போனால் அசிங்கப்பட்டுவிடுவீர்கள் என்றதுடன் நில்லாமல், ‘கெட் அவுட்
விஜய்’ என்று தி.மு.க. ஐ.டி. விங் ஆட்கள் டிரெண்டிங் செய்துவிடுவார்கள் என்றும் எச்சரித்தாராம்.
அதன் பிறகே தான் கலந்துகொள்ளும் முடிவை விஜய் தள்ளி வைத்தாராம்.
இந்த தகவல் வெளியே தெரியவந்து இப்போது விஜய் ரசிகர்கள் எரிச்சலாகியிருக்கிறார்கள்.
இரண்டாம் ஆண்டு மாநாட்டில், ஒரு கட்சித் தலைவர் போன்று விஜய் பேசவேண்டிய கூட்டணி விஷயத்தை
எல்லாம் ஆதவ் பேசினார். இப்போது விஜய்க்கு கிடைத்திருக்கும் சிம்பிள் பாப்புலாரிட்டியை
தடுத்து நிறுத்தியிருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கழுத்தைப் பிடித்து வெளியே
தள்ளியது போன்று இப்போதே வெளியேற்றுங்கள் என்று குரல் கொடுக்கிறார்கள்.
