Share via:
தனுஷ் – நயன்தாரா விவகாரம் தற்போது பெரும் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. இவர்கள் சேர்ந்து நடித்த யாரடி நீ மோகினி பெரியளவில் வெற்றி பெற்ற நிலையில் நல்ல நட்பு தொடர்ந்தது. அதன் காரணமாக எதிர்நீச்சல் படத்தை தனுஷ் தயாரித்த போது சம்பளமே வாங்காமல் ஒரு பாடலுக்கு நடமானடிக் கொடுத்தார் நயன்தாரா.
அந்த வகையில தனுஷ் தயாரிப்பில், நயன்தாரா, விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்கிய விக்னேஷ்சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது.
இதைத்தொடர்ந்து இந்த ஜோடி 9 வருட லிவின் ரிலேஷியன்ஷிப்பில் இருந்து வந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு தற்போது வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தையும் உள்ளது.
மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட் ஹோட்டலில் நடந்த இவர்களது கிராண்டா திருமணம் 2 வருடங்கள் கழித்து தற்போது நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆவணப்படமாக வெளியாகியுள்ளது. பியாண்ட் த ஃபேரி டேல் என்ற தலைப்பில் உருவாகிள்ள இந்த ஆவணப்படம் வெளியாவதில் கடந்த 2 வருடங்கள் தாமதம் ஆனதற்கு நடிகர் தனுஷ் தான் என்று நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அதாவது இதில் வரும் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ், நயன்தாராவிடம் 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட நயன்தாரா, தனுஷை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார்.
இந்நிலையில் பல சர்ச்சையான கருத்துகளுக்கு மத்தியில் தனுஷின் தந்தையும், பிரபல இயக்குனருமான கஸ்தூரிராஜா முதல் முறையாக இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில், எங்களுக்கு நிற்கக் கூட நேரமில்லை. எங்களுக்கு நேரம்தான் முக்கியம், எங்கள் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களுக்கு பதில் கூற எங்களுக்கு நேரம் கிடையாது. என்னை போன்று எனது மகனுக்கும் வேலைதான் முக்கியம் என்று பேசினார்.
மேலும் நயன்தாரா தடையில்லா சான்று பெற 2 வருடங்களாக காத்திருந்ததாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் சொன்ன அவர், நயன்தாரா சொல்வது எல்லாம் பொய். இது தொடர்பாக மேலும் பேச எனக்கு விருப்பம் கிடையாது என்று தெரிவித்துவிட்டு சென்றார்.