News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பணிக்காலம் நாளை மறுநாள் முடிவடையும் நிலையில், இன்று அவரை தீயணைப்பு ஆணையத் தலைவராக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றுக்கொண்டார் சங்கர் ஜிவால்.

சங்கர் ஜிவால் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் தமிழகத்துக்கு நெருக்கமானவர்.  பொறியாளரான இவர் கடந்த 1990 ஆண்டு தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். தனது முதல் பணியை மன்னார்குடி உதவி எஸ்பியாக தொடங்கிய அவர், சேலம், மதுரை எஸ்பியாகவும், பிறகு திருச்சி போலீஸ் கமிஷனராகவும் சிறப்பாக செயல்பட்டார்.

பின்னர் ஒன்றிய போதை பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குநர், உளவுப்பிரிவு ஐஜி, சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபியாக பணியாற்றினர். அதைதொடர்ந்து 2021ம் ஆண்டு டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற அவர், சென்னை பெருநகர காவல்துறை கமிஷனராக சிறப்பாக பணியாற்றினர்.

பிறகு தமிழ்நாடு காவல்துறை படை தலைவராக கடந்த 2023ம் அண்டு ஜூன் 30ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். தமிழகத்தில் ரவுடிகள் ஒழிப்பு, சாதி கலவரங்கள் தடுத்தல், போதை பொருட்கள் எதிரான கடுமையான நடவடிக்கை எடுத்தார். இவரது காலக்கட்டத்தில் சில பிரச்னைகள் நடந்தாலும் அதை தனது அனுபவத்தினால் சுமுகமாக தீர்வுகண்டார். இவரது பணிக்காலத்தில் எந்த வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல் சிறப்பாக பணியாற்றிய டிஜிபியாக சங்கர்ஜிவால் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்

சுமார் 35 ஆண்டு கால காவல் துறை அனுபவத்தில் அவர் சிறப்பாக பணி செய்துள்ள சங்கர் ஜிவாலின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக புதிய பதவி வழங்கி தமிழக அரசு கெளரவித்திருக்கிறது.

அடிக்கடி பட்டாசு விபத்துகள் ஏற்பட்டு பெரும் பொருள் இழப்புகள் மட்டுமல்லாமல் ஏராளமான உயிர் இழப்புகளையும் தமிழகம் சந்தித்து வருகிறது. இப்படியான விபத்துகள் மற்றும் பேரழிவு, தீ விபத்துகளை முற்றிலும் தடுப்பதற்குத் தேவையான வழிமுறைகளை இந்த ஆணையம் வழங்கும். இதன் அடிப்படையில் புதிய கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைய இயங்கும். அது மட்டுமின்றி தீயனைப்புத் துறைக்குத் தேவையான காலத்துக்கு ஏற்ப மேம்பட்ட நவீன உபகரணங்கள், கருவிங்கள் வாங்குவதற்கும் இந்த ஆணையம் ஆலோசனை வழங்கும்.
இன்று டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை வீட்டு வசதி நிறுவன டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் ஆகிய இருவருக்கும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் இன்று மாலை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்படுகிறது.

 

புதிய பதவி அறிவிக்கப்பட்ட நிலையில் டிஜிபி சங்கர் ஜிவால் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இனி, இந்த துறை மேம்படும் என்றே எதிர்பார்க்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link