Share via:
பொதுமக்கள் பணத்தை
கொள்ளையடித்த குற்றச்சாட்டில் இந்திய மக்கள்
கல்வி முன்னேற்றக் கழகத் தலைவரும், பாஜக
ஆதரவாளரும் ஆன தேவநாதன்
யாதவ் கைது செய்யப்பட்டு உள்ளார்.
50 கோடி வரை மோசடி நடைபெற்றதாக
140-க்கும் மேற்பட்டோர் அளித்த புகாரின் அடிப்படையில்
இந்த நடவடிக்கையை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்
எடுத்து உள்ளனர்.
இவர் கடந்த தேர்தலில்
பா.ஜ.க. கூட்டணியில் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டவர் என்பதும் இவரிடம் பெரும் நிதி
வாங்கிக்கொண்டே தேர்தலில் நிற்க அண்ணாமலை அனுமதி கொடுத்ததாகக் கூறப்பட்டது. இத்தனைக்கும்
தேர்தல் நடக்கும் நேரத்திலேயே இவர் மீதான குற்றச்சாட்டு வெளியானது. ஆனாலும், தேர்தலில்
நிற்பதற்கு அனுமதிக்கப்பட்டார்.
இப்போது, பாதிக்கப்பட்டவர்கள்
ரோட்டில் அமர்ந்து போராடத் தொடங்கவே, தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
வின் டிவி தொலைக்காட்சி உரிமையாளரும், இந்திய மக்கள் கல்வி
முன்னேற்றக் கழகத் தலைவராகவும் உள்ள
தேவநாதன் யாதவ், சென்னை மயிலாப்பூரில்
இயங்கி வரும் ‘தி மயிலாப்பூர்
இந்து சாஸ்வத நிதி லிமிடெட்’
என நிதி நிறுவனத்தின்
தலைவராகவும் இருந்து வருகிறார்.
இந்த நிறுவனத்தில் 10 முதல்
15 சதவீதம் வரை வட்டி தருவதாக
கூறி பல்வேறு நபர்களிடம் இருந்து
நிதியை பெற்று சுமார் 50 கோடி
வரை நிதி மோசடி
நடைபெற்றதாக புகார் எழுந்தது. மேலும், 525 கோடி ரூபாய் வரையிலான
வைப்பு தொகையை திரும்ப தர
நிதி நிறுவனம் மறுப்பதாக முதலீட்டாளர்கள்
குற்றம்சாட்டினர். நிதி நிறுவனம் அளித்த
150 காசோலைகள் பணம் இல்லாமல் திரும்ப
வந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.
மயிலாப்பூர்
நிதி நிறுவனத்தில் இரு்ந்து ஆட்டைய்ப்போட்ட பணத்தில்
இருந்து திநகரில் விலை உயர்ந்த பண்ணை
வீட்டை கட்டி உள்ளார். மேலும்
33 தொழில்களை பினாமி பெயரில் நடத்தி
வருகிறார். ராமநாதபுரம்
மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை விலைக்கு
வாங்கியது மட்டுமல்லாமல் புறம்போக்கு நிலங்களையும் கணக்கில்லாமல் வளைத்துப் போட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகளில்
இருந்து தப்புவதற்காகவே பா.ஜக.வில் போட்டியிட முன்வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதனாலே
சிவகங்கை தொகுதியில் பரப்புரை செய்ய இருந்த
அமித் ஷாவின் நிகழ்ச்சிகள் ரத்து
செய்யப்பட்டன. தேர்தலிலும் தோற்று மூன்றாவது
இடத்துக்குப் போயிருக்கிறார்.
வழக்கமாக இது போன்ற
நேரத்தில் ஆவேசமாக அறிக்கை விடும் அண்ணாமலை இவரது விவகாரத்தில் ரொம்பவே மழுப்பியிருக்கிறார்.
அதாவது, ‘’இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் நிறுவனத் தலைவர், தேவநாதன் யாதவ்
தமிழகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தி அறிந்தேன். மயிலாப்பூர் இந்து
சாசுவத நிதி நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்
என்பதில் தமிழக பா.ஜ.க. உறுதியாக உள்ளது. தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்தி, முதலீட்டாளர்கள்
அனைவருக்கும் இதனை உறுதி செய்ய வேண்டும். அதே நேரத்தில், திமுக அரசின் சட்டம் ஒழுங்கு
மற்றும் நிர்வாகத் தோல்வியைச் சுட்டிக் காட்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை
அச்சுறுத்தும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றால், அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.’
என்று மேம்போக்காக அறிக்கை விட்டு நழுவியிருக்கிறார்.
இவர் அப்ரூவர் ஆகி,
தேர்தலில் நிற்பதற்கு யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தேன் என்று தெரிவித்தால் அண்ணாமலைக்கும்
சிக்கல் வரலாம் என்கிறார்கள். பா.ஜ.க.வுக்கு கெட்ட நேரம்.