News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விசித்ரா தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டதை அறிந்த அவரது மூத்த மகன் கல்லூரிக்கு கூட செல்லாமல் மனமுடைந்து போயுள்ளதாக அவர் கணவர் தெரிவித்துள்ளார்.


பிக்பாஸ்7ல் பூகம்பம் என்ற டாஸ்கில் பேசிய விசித்ரா, தான் சந்தித்த பாலியல் அத்துமீறல் பிரச்சினைகள் குறித்து பேசியது சமூகவலைதளங்களில் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. யார் அந்த நடிகர் என்றும், இவர்தான் அந்த நடிகர் என்றும் பல்வேறு யூகங்கள் இணையத்தில் வெளியாகி கடந்த ஒரு வாரமாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


இதைத்தொடர்ந்து விசித்ராவின் கணவரான ஷாஜி ஒரு பேட்டியில் பேசும்போது, ‘‘விசித்ரா தனது பாதுகாப்பு காரணமாக அந்த நடிகர் யார் என்ற பெயரை அவர் வெளியில் சொல்லவில்லை. இந்த சம்பவம் குறித்து நான் எப்போது பேசினாலும் அவர் கண்கலங்குவார். இதனால் அந்த சம்பவ்ம குறித்து அதிகம் பேசாமல் இருந்தோம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இது குறித்து விசித்ரா பேசியது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.


மேலும் எனது மூத்த மகனுக்கு 21 வயதாகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ‘என்னப்பா இது’’ என்று என்னிடம் கேள்வி எழுப்பினார். அதோடு கல்லூரிக்கு போகாமல் மனமுடைந்து இருக்கிறார். இனிமேல்தான் நான் என் மகனிடம் பேசி சமாதானம் செய்ய வேண்டும்’’ என்று கணவர் ஷாஜி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link