News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ஈரோடு இடைத்தேர்தலில் அத்தனை எதிர்க்கட்சிகளும் போட்டியிடாமல் பின் வாங்கி விட்டன. புதிதாக வந்த விஜய்யும் போட்டியில்லை என்று அறிவித்தார். அதனால் தி.மு.க.வை எதிர்கொண்ட நாம் தமிழர் சீமான் கணிசமான வாக்குகளைப் பெற்று கடும் போட்டி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், வழக்கம் போல் இந்த தேர்தலிலும் டெபாசிட் பறி கொடுத்திருக்கிறார்.

தேர்தல் முடிவின் படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி டெபாசிட்டை இழந்தது. நோட்டாவுக்கு 3வது இடம் கிடைத்து உள்ளது. 

இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வி.சி.சந்திரகுமார் 1,15,709 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி 24,151 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார். நோட்டாவுக்கு 6,109 வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் நோட்டாவுக்கு 3வது இடம் கிடைத்து உள்ளது.
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக, நாதக உட்பட 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், நாதகவை தவிர மீதமுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் என 44 பேரும் நோட்டாவை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளனர். நோட்டாவில் 6,109 வாக்குகள் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் போட்டியிட்ட அனைத்தும் வேட்பாளர்கள் இரட்டை இலக்கை தாண்டிதான் வாக்குகளை பெற்று உள்ளனர்.

இந்த நிலையில் தி.மு.க.வினர், ‘’இரண்டே இரண்டு கட்சிகள் போட்டியிடும் போது கூட டெபாசிட் வாங்க முடியவில்லை, இதில் இருந்து ஒன்று தெளிவாகிவிட்டது, நீங்க ஒத்த கட்சியா போட்டியிட வாய்ப்பு வருமேனில் அப்ப கூட உங்களுக்கு டெபாசிட் கிடைக்க வாய்ப்பு இல்லை ராஜா வாய்ப்பு இல்லை.’’ என்று கிண்டல் செய்கிறார்கள்.

அதோடு இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் வாக்குகள் எல்லாம் தி.மு.க.வுக்கு வந்துள்ளது. பா.ஜ.க.வின் வாக்குகள் எல்லாம் நாம் தமிழருக்குப் போயிருக்கிறது என்று கணக்குப் போட்டு சுட்டிக் காட்டுகிறார்கள்.

அதாவது கடந்த 2024 தேர்தல் தி.மு.க.வும் அ.தி.மு.கவு. சேர்ந்து 1,21,464 வாக்குகள் பெற்றன. இந்த 2025 தேர்தல் தி.மு.க. மட்டும் தனித்தும் நோட்டோவுடன் சேர்ந்தும் 1,21,818 2024 வாக்குகள் பெற்றுள்ளன. இதையடுத்து அ.தி.மு.க. வாக்குகள் தி.மு.க.வுக்கு வந்துள்ளது என்று கணக்கு காட்டுகிறார்கள். அதேபோல் கடந்த தேர்தலில் நாம் தமிழர், பா.ஜ.க. இணைந்து 24,586 வாக்குகள் பெற்றிருந்தன. இந்த 2025 தேர்தலில் நாம் தமிழர் மட்டும் 24,151 வாக்குகள் பெற்றுள்ளன. அதனால் பா.ஜ.க. மட்டுமே நாம் தமிழருக்குப் போயிருக்கிறது. நாம் தமிழர் கட்சி என்பது பா.ஜ.க.வின் பி டீம் என்பது உறுதியாகிவிட்டது என்கிறார்கள்.

அதேநேரம் நாம் தம்பிகள் இன்னமும் வீரத்தைக் குறைக்காமல், ‘’நாம் தமிழர் கட்சிக்கு பலத்த அடி என ஒரு கூட்டம் கதறி கிட்டு இருக்கு பணபலம் உட்பட அரசின் அத்துணை அதிகார பலத்துடன் தி.மு.க. வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட எந்த ஒரு அதிகார பலமும் இல்லாமல் நாம் தமிழர் பெற்ற வாக்குகளே அதிகம் என்கிறார்கள்.

நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமியும், “இது பின்னடைவு இல்லை. மக்களைச் சிந்திக்க வைத்துள்ளார் சீமான். அதனால்தான் கடந்த தேர்தலை விட நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. இது திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்று கூறியிருக்கிறார்.

இன்னும் எத்தனை பயிற்சி எடுக்கப் போறாங்கன்னு தெரியலையே, பாவம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link