Share via:
காங்கிரஸ் கட்சியினர் மட்டுமே விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பிவந்தார்கள்.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் ஸ்டாலினும் சென்சாருக்கு எதிராக
குரல் கொடுத்திருப்பது விஜய் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
ஜனநாயகனுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின், ‘’சி.பி.ஐ., ஐ.டி. இ.டி.
வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான
கண்டனங்கள்’’ என்று போட்டுள்ளார்.
அதேநேரம், விஜய் பொங்கலுக்கு படம் வெளியாக வேண்டாம் என்று திட்டமிட்டே
ஜனநாயகன் படத்தை தள்ளி வைத்துள்ளார். இந்த படத்தை வைத்து பரபரப்பு உண்டாக்கி மக்களிடம்
கொந்தளிப்பு ஏற்படுவதற்கு திட்டமிட்டுள்ளார். அதனால் படம் குடியரசு தினத்தன்றே வெளியாகும்
என்று சொல்லி, அதற்கு காரணமும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி மூன்று நாட்களில் பராசக்தி கிளியரன்ஸ்
வாங்கிவிட்டது. ஆனால், அந்த கமிட்டிக்குப் போகாமல் நீதிமன்றம் போனது ஏன் என்று கேள்வி
எழுப்புகிறார்கள்.
எதிர்க்கட்சியான திமுகவே இந்த விஷயத்தில் தங்கள் நிலைப்பாட்டைத்
தெரிவித்த பிறகும் விஜய்யும் எடபாடி பழனிசாமியும் கப்சிப் என்று இருக்கிறார். இதுதான்
ஆபத்தான அரசியல். விஜய் இப்படி மெளனமாக இருப்பதற்குப் பெயர் பயமா அல்லது வியூகமா..?