News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கடந்த சில தினங்களாகவே ஆளும் தி.மு.க.வும் ஸ்டாலினும் கடுமையாக பின்னடைவை சந்திக்கும் நிலையில் அ.தி.மு.க.வுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் ஆதரவு பெருகிவருகிறது. மா.செ. கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்துகொண்டதை அடுத்து ஆளுமையாக தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

செங்கோட்டையன் விருந்துக்கு வராத நிலையில் நேற்றைய மா.செ. கூட்டத்தில் அவர் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், எந்த பரபரப்பும் இல்லாமல் வழக்கம் போல் செங்கோடையன் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ‘கூட்டணி முடிவு செய்யும் அதிகாரத்தை எனக்கு நீங்கள் கொடுத்த காரணத்தால் பா.ஜ.க. கூட்டணியை தேர்வு செய்திருக்கிறேன். அதேநேரம் அதிமுக கொள்கையை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு உள்ளதால், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பா.ஜ.க. கூட்டணி குறித்து அதிருப்தியில் இருந்தவர்களையும் அழைத்து சமாதானம் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

கடந்த மூன்று நாட்களாகவே தி.மு.க. அமைச்சர்களுக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் சிக்கல் வந்துகொண்டே இருக்கின்றன. செந்தில்பாலாஜி, பொன்முடி, துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என்று வரிசையாக செக் வைக்கப்பட்டு வருகிறது. எனவே, வரும் தேர்தல் நேரத்தில் பெரும்பாலான நபர்கள் சிறையில் இருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. அதோடு தயாநிதி மாறன் வழக்கும் தள்ளுபடியாகியிருக்கிறது.

இந்நிலையில், ஸ்டாலின் மீது எடப்பாட்டி பழனிசாமி டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அவரது அறிக்கையில், ‘’தமிழ்நாடு அரசில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், வெறும் 3935 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது ஸ்டாலின் மாடல் அரசு. இந்த தேர்வை நம்பி வருடக்கணக்கில் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் இது! அரசு என்பதன் இலக்கணத்தையே மறந்து, கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்படும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக பணியிடங்களை 10,000-ஆக உயர்த்த வேண்டும்’’ என்று கோரியிருக்கிறார். இது தான் மக்களின் எண்ணமுமாக இருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link