Share via:
டிசம்பர் மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இன்று காலை 10 மணி முதல் இணையத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் தேவஸ்தான் அறிவித்துள்ளது.
ஆந்திராவில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் தினசரி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்கள் என்றால் லட்சக்கணக்கில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க குடும்பத்துடன் புறப்பட்டு விடுகின்றனர்.
அந்தவகையில் தற்போது திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. எனவே வழக்கத்திற்கும் மாறாக பக்தர்களின் கூட்டம் வெள்ளம் போல் கரைபுரண்டோடுகிறது.
இந்நிலையில் டிசம்பர் மாத திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக பக்தர்கள் 300 ரூபாய் டிக்கெட்டுகளை இன்று காலை 10 மணி முதல் திருப்பதி தேவஸ்தான ஆன்லைனில் (https://tirupatibalaji.ap.gov.in ) முன்பதிவு செய்யலாம்.
டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் வருகிற டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஏழுமலையான எந்த தடங்கலும் இல்லாமல் தரிசிக்கலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

