Share via:
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார்.
பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து விரைவில் பரிசீலித்து முடிவு செய்து அறிவிக்கபப்டும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆவின் பால் கொள்முதல் விலயை உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளதாக தற்போது தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலின் கொள்முதல் விலையை பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.1 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பை பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ளார். மேலும் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டாலும், விற்பனை விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பச்சை நிற ஆவின் பால் 50 சதவீதம் அளவுக்கு குறைந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இந்த கொள்முதல் விலை உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பால் உற்பத்தியாளர்களின் பல நாள் கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது.
