Share via:
சின்னஞ்சிறியவர்கள் எல்லாம் நடிகர் விஜய்யைப் பார்க்கும் ஆவலில்
ரசிகர் மன்ற மாநாட்டுக்கு வந்து குவிய வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்த்தது போலவே
கட்டுக்கடங்காத கூட்டம் கூட ஆரம்பித்து இருக்கிறது. இன்னும் நேரமாக நேரமாக என்ன நடக்குமோ
என்ற பதற்றம் காவல் துறைக்கும் விஜய் கட்சி நிர்வாகிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.
காலை முதல் கூட்டம் அதிகரிக்கவே உடனே மாநாட்டு திடலில் அனுமதிக்க துவங்கி விட்டனர்.
கட்சியின் உறுப்பினர்கள் என்பதை தாண்டி சாதாரண பொதுமக்கள் கூட வரத் துவங்கி இருக்கிறார்கள்.
வயதானவர்கள், குழந்தைகள், இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என்று அனைவரையும்
உள்ளடக்கிய மிகப்பெரிய மக்கள் திரட்சி திரள்கிறது.
தொடர்ந்து விஜய்க்கு பாராட்டு தெரிவித்து வரும் சீமான் இன்றும்
ஒரு வாழ்த்து பதிவு செய்திருக்கிறார். பா.ஜ.க.வின் கூட்டணியில் இருக்கும் பாரிவேந்தர்
திடீரென் பாராட்டு தெரிவித்திருக்கிறார். அவர் கட்சி மாறுவதற்கு வாய்ப்பு உண்டு என்று
தெரிகிறது. இது வரை 19க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்திருப்பதாக செய்திகள் வெளியாவது
மக்களையும் அச்சப்பட வைத்திருக்கிறது.
இந்த நிலையில் பா.ஜ.க.வினர் கடும் கடுப்பில் இருப்பது போல் அக்கட்சியின்
வினோஜ், ‘’விஜய் ரசிகர்கள் சிலர் கையில் அரிவாளை வைத்துக்கொண்டு மற்ற கட்சிகளுக்கு
மிரட்டல் விடுக்கும் ரீல்ஸ்களை பார்க்க முடிந்தது. த.வெ.க. மாநாட்டிற்கு புறப்பட்ட
ரசிகர்கள் பலர் சென்னை உள்பட பல இடங்களில் சாலை விபத்துகளில் சிக்கி பலியாகி உள்ளனர்.
விழுப்புரத்திற்கு டிக்கெட் எடுத்து பயணித்த ரசிகர், விக்கிரவாண்டி அருகே ரயில் செல்லும்
போது நேராக ரயிலில் இருந்து குதித்து மாநாட்டிற்கு செல்ல நினைத்து உயிரை இழந்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்
கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை நடிகர் விஜய் வழங்க வேண்டும்.
விஜய்யும், அவருடைய ரசிகர்களும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது ஒன்றுதான். இது
ரீல் அல்ல, ரியல்.’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

