News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பாமக-வில் அன்புமணியின் பதவிக்காலத்தை ஆகஸ்ட் 1, 2026 வரை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. எனவே, கட்சி, சின்னம் எல்லாமே அன்புமணிக்கே சொந்தம் என்று அவரது ஆதரவாளர் வழக்கறிஞர் பாலு கூறிய விவகாரத்துக்கு ராமதாஸ் தரப்பில் ஜிகே மணி கடுமையாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

பாமகவின் நிரந்தரமான தலைமை அலுவலகம் என்பது தேனாம்பேட்டை முகவரியில் இருப்பது. ஆனால், நிரந்தர முகவரியை சூழ்ச்சி செய்து கபட நாடகம் நடத்தி மாற்றப்பட்டுள்ளது. இது மாற்றப்பட்டதே மோசடியான செயல். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமதாஸ் அணியைச் சேர்ந்த ஜிகே மணி கொந்தளித்துள்ளார்.

மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 9ஆம் தேதி பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ‘பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ், பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா’ ஆகியோர் மேலும் ஓராண்டுக்கு பதவியில் நீடிப்பார்கள் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கு பாமக நிறுவனர் மற்றும் தலைவரான ராமதாஸ், ‘எந்தவொரு கூட்டத்தையும் கூட்டுவதற்கு அன்புமணிக்கு உரிமை இல்லை என்றும், அவர் சாதாரண செயல் தலைவர் தான் அன்புமணி கூட்டிய பொதுக்குழுக் கூட்டம் சட்ட விரோதம்’ என்று தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் அனுப்பினார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணியின் ஆதரவாளரான வழக்கறிஞர் பாலு, அன்புமணி தலைமையில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை காட்டினார்.

உடனடியாக இதற்கு பதிலடியாக திண்டிவனம் தைலாபுரத்தில் ராமதாஸ் தரப்பு பாமக எம்.எல்.ஏ. ஜி.கே. மணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இந்த ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் பிகார் ஆகிய மாநிலங்களில் பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கி அறிவித்துள்ளது. அந்தக் கடிதத்தில் பாமகவின் தலைவர் என மட்டும் குறிப்பிட்டு, தலைமை அலுவலக முகவரியாக தி.நகர் குறிப்பிடப்பட்டுள்ளது. பாமகவின் நிரந்தரமான தலைமை அலுவலகம் என்பது தேனாம்பேட்டை முகவரியில் இருப்பது. ஆனால், நிரந்தர முகவரியை சூழ்ச்சி செய்து கபட நாடகம் நடத்தி மாற்றப்பட்டுள்ளது. இது மாற்றப்பட்டதே மோசடியான செயல். தற்போது முகவரி மாற்றப்பட்டிருப்பது கட்சியின் நிறுவனரும், தலைவருமான ராமதாஸ் மற்றும் பாமக தொண்டர்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தி.

இதுமட்டுமின்றி பாமகவின் சட்டவிதியில் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் ஒப்புதல் இல்லாமல், நிர்வாகக் குழு, செயற்குழு, பொதுக்குழு என எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது. எனவே இங்கேயும் விதி மீறப்பட்டுள்ளது.

29.05.2025 அன்று பாமகவின் நிர்வாகக் குழு கூடி பாமகவின் நிறுவனர் ராமதாஸை கட்சியின் தலைவராக தேர்வு செய்தது. இதன் மூலம் அன்றிலிருந்து பாமக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அதனைத் தொடர்ந்து 8.7.2025 அன்று செயற்குழு கூடி, நிர்வாகக் குழு எடுத்த முடிவை அங்கீகரித்துவிட்டது. அதன்பின் 19.8.2025 அன்று பாமகவின் பொதுக் குழு முழு மனதோடு கட்சியின் தலைவராக ராமதாஸை ஏற்றுக்கொண்டது” என விளக்கம் கொடுத்துள்ளார்.

விரைவில் காவல் துறையில் ஒரு புகார் கொடுத்து, அந்த புகாருடன் டெல்லிக்குப் போக இருக்கிறாராம் ராமதாஸ். இன்னும் என்னவெல்லாம் வேடிக்கை நடக்குமோ..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link