Share via:

சென்னை மேற்கு மாம்பலம் கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட
சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி, ‘”கோமியம் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது.
தமிழர்கள் காசி பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்” என பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
வட மாநிலங்களைப் போன்று தென் மாவட்டத்தையும் மாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
காமகோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் தமிழ்நாடு
மாணவர் கழகம், ’’கோமியம் குடித்தால் ஜுரம்
சரியாகுமென அறிவியலுக்கு புரம்பான கருத்தை பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடிக்கு
தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டனம் தெரிவிக்கிறது. அறிவியல்படி
மாட்டு சிறுநீர் என்பது மாட்டின் கழிவு. மேலும் ஏற்கனவே நோய் வாய்ப்பட்டிருக்கும் மாடாக
இருந்தால் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய, நோயைப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகள்
அந்த மாட்டின் சிறுநீரில் இருக்கும்.
இதை மனிதர்கள் அருந்தினால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சுவாசக்
கோளாறு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று மருத்துவர்கள்
எச்சரிக்கும் நிலையில் அறிவியலை ஊக்குவிக்க வேண்டிய இந்திய தொழில்நுட்பக் கழகத்தின்
இயக்குனர் அறிவியலுக்கு எதிராக பேசியிருப்பதை தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டிக்கிறது. மேலும்
தன் பேச்சுக்கான ஆதாரத்தை அவர் வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில் தான் பேசியது தன்னுடைய
சொந்த கருத்து என்றும், அறிவியல் படி தவறு என்றும் பொது வெளியில் வருத்தம் தெரிவிக்க
வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தி.மு.க.வினர், ‘’இத்தனை நாள் அறிவியல்
கல்வி நிறுவனமாக இருந்த IIT சங்கர மடமாக மாறிவருகிறதோ என்கிற சந்தேகம் கிளம்பியுள்ளது.
இந்துத்வா கருத்தான ஒரே பாரதம் உன்னத பாரதம் – இதற்கும் IIT க்கும் என்ன சம்பந்தம்
? தமிழ்நாட்டு மக்கள் காசியைப் பற்றித் தெரிந்து கொள்ள நீங்கள் ஏன் இவ்வளவு மெனக்கெட்டு
வேலை பார்க்க வேண்டும் ? காசி என்றதும் பாய்ந்து வரும் காமகோடி அவர்கள் தலைமையில்
IIT வளாகத்தில் தமிழ் வளர்க்க நடத்தப்பட்ட கருத்தரங்குகள் எத்தனை ?
தமிழ் மொழியில் எத்தனை ஆய்வுகள் நடத்படுகிறது? ஒன்றிய அரசை நக்கிப்
பிழைக்கத் தமிழைக் கருவியாகப் பயன்படுத்தும் பிழைப்புவாத அரசியல்தான் ஆளுநர் ரவியிடம்
நீங்கள் கற்ற பாடமா ? “உடலில் ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அழிக்கும்
அருமருந்து கோமியம்” எனச் சொல்லும் ஆர்.எஸ்.எஸ் கைக்கூலிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க
முடியும். சனாதனத்தைப் பரப்பும் இடமாக தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களை பயன்படுத்த
முனையும் உங்கள் வேலை இங்கே எடுபடாது’’ என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.
ஐஐடி மாணவர்களுக்கு இனி கேண்டீனில் கோமியம் கொடுப்பாரோ..?