Share via:
ஈஷா யோகா மையம் போன்ற இடங்களில் ராணுவம், போலீஸார் நுழைவது சரியாக
இருக்காது என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்பு காட்டியிருப்பதை அடுத்து ஜக்கி வாசுதேவ்
நிம்மதிப் பெருமூச்சு விடுத்துள்ளார். ஒரு சாதாரண விஷயத்திற்கே உச்சநீதிமன்றத்தில்
போய் தடை வாங்குகிறார்கள் என்றால் மிகப்பெரிய தப்பு நடந்திருக்கிறது என்று கொதிக்கிறார்கள்,
ஈஷா யோக மைய எதிர்ப்பாளர்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்த ஈஷா யோகா மையம் தொடர்பான வழக்கு
விசாரணையை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு கோவை வடவள்ளி பகுதியைச்
சேர்ந்த முனைவர் காமராஜ், ஈஷா யோக மையத்தில் உள்ள தங்களது மகள்களை மீட்டுத்தர கோரி
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். ஈஷா யோக மையத்தில்
ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது
இந்த நிலையில் விசாரணைக்கு எதிராக ஈஷா யோக மையம் உச்சநீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்கிறது அந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்து சென்னை உயர்நீதிமன்றத்தில்
உள்ள வழக்கை தங்களிடம் மாற்றிக் கொண்ட உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் கேட்டு அறிக்கையை
தங்களிடம் தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. . ஈஷா யோகா
மையம் மீது உள்ள வழக்குகள் குறித்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை
உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டிருந்த நிலையில், அதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
விதித்திருக்கிறது.
ஜனாதிபதி, பிரதமர் போன்றவர்கள் சென்று வரும் இடத்தில் விசாரணை
நடப்பதை அறிந்து சாமான்ய மக்கள் ஆச்சர்யமானார்கள். அங்கு நடக்கும் உண்மைகள் வெளியே
வந்துவிடும் என்று நினைத்தார்கள். ஆனால், இவை எதுவுமே நடக்கப்போவதில்லை என்பதை நிரூபிக்கும்
வகையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்திருப்பதாகக் கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இந்த விவகாரத்திற்காக ஒரு விழா நடத்தி அதற்கும் முக்கியப் பிரமுகர்களை ஜக்கி வாசுதேவ்
அழைத்தாலும் ஆச்சர்யம் இல்லை.
விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே மக்கள் நம்பிக்கை
பெற முடியும் ஜக்கி.