Share via:
லண்டனில் போய் அரசியல்
படித்து வந்த பிறகு அண்ணாமலையிடம் மிகுந்த மெச்சூரிட்டி தென்படுகிறது என்று சீமானே
பாராட்டியிருந்தார். அதையெல்லாம் ஒட்டுமொத்தமாக மூட்டை கட்டும் அளவுக்கு சவுக்கடி போராட்டம்
நடத்திவிட்டார் அண்ணாமலை. இந்த விவகாரத்தை வைத்து தி.மு.க.வினரும் அ.தி.மு.க.வினரும்
அண்ணாமலையை அநியாயத்துக்கு லந்தடிக்கிறார்கள்.
பா.ஜ.க.வில் இருந்து
அண்ணாமலையால் வெளியேற்றப்பட்டு தற்போது அ.தி.மு.க.வில் தஞ்சம் அடைந்திருக்கும் காயத்ரி
ரகுராம், ‘’Bro சாமி உங்களை மன்னிக்க மாட்டார். பெண்களின் வீடியோ ஆடியோ, தங்கக் கடத்தல்,
மணல் செங்கல் கல் கடத்தல், டிரான்ஸ்பார்மர் டீல், ஆருத்ராவில் கமிஷன், பொது மக்களின்
பணத்தை மிரட்டுகிறது, லாவண்யா மரணத்தை மதமாற்ற மரணம் என்று பொய்யாக்கி, நீங்கள் 6 சவுக்கடிகளை
மட்டுமே செய்ய லிஸ்ட் பெரிசு bro.
இப்போது அண்ணா பல்கலைக்கழக
பாலியல் குற்றத்தை ஜோதிட பரிகாரமாக மாற்றி இருக்கிறீர்கள் கடவுளுக்கு செய்வதை விட நகைச்சுவையாக
ஆக்கிவிட்டீர்கள். திமுகவுக்காக செய்கிறேன் சொன்னாய் ஆனால் மீண்டும் கடவுளிடம் பொய்
சொன்னாய்…’’ என்று கிண்டல் செய்திருக்கிறார்.
அண்ணாமலை சவுக்கால்
அடித்துக்கொள்ளப் போகிறார் என்றதும் கோவை மாவட்ட
பாஜக மகளிரணி தலைவி ப்ர்த்தி
லட்சுமி தேங்காய் நாரால் பின்னப்பட்ட
நிஜ சாட்டையைக் கொண்டுவந்தார். அதைக்
கண்டதும் மிரண்டுபோன அண்ணாமலை பஞ்சு திரியால் செய்யப்பட்ட பருத்தி சாட்டையைத் தயார்
செய்துவிட்டோம் என்று சொல்லிவிட்டார். அதனால் தான் அண்ணாமலை அடித்த அடியினால் தடம்
விழவில்லை, ரத்தமும் வரவில்லை.
ஆகவே, ’அண்ணாமலையின்
பருத்தி நூல் சாட்டை உங்கள் சருமத்திற்கு மென்மையானது.. உங்கள் மேனியை மசாஜ் செய்து
அதிக கொழுப்பை குறைக்க உதவிடும்.. இன்றே வாங்கிடுவீர் பருத்தி நூல் சாட்டை’ என்று உடன்பிறப்புகள்
கிண்டல் செய்கிறார்கள்.