Share via:
2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தொடர் இன்று (ஜூலை 26) பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்த தொடரில் சர்வதேச நாடுகளில் இருந்து மொத்தம் 10,714 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில் 117 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
போட்டி தொடருக்கு முன்னதாக அனைத்து விளையாட்டு வீரர்களையும் 600 படகுகளில் செய்ன் நதியில் ஊர்வலமாக அழைத்து செல்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. போட்டிகள் தொடங்க இன்னும் சிறிது நேரமே உள்ளது. சர்வதேச விளையாட்டு வீரர்கள் பாரிஸ் நகரில் ஒன்று திரண்டுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரான்ஸ் மெட்ரோ ரெயில் நிலையத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் மெட்ரோ ரெயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு 8 லட்சம் பயணிகள் அவதிக்கு ஆளாயினர்.
ஒலிம்பிக் போட்டியை சீர்குலைக்கும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து பிரான்ஸ் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளனர்.
மெட்ரோ ரெயில் சேவை மறுபடியும் வருகிற 29ம் தேதி தொடங்கப்படும் என்று ரெயில் நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.