Share via:
தமிழகத்தில் தொகுதி பேரத்தை காங்கிரஸ் கட்சி முடித்துவிட்டாலும்,
இன்னமும் எந்தெந்த தொகுதி யாருக்கு என்பது முடிவுக்கு வரவில்லை. அதற்குள் பாண்டிச்சேரி
பஞ்சாயத்து கொடி கட்டிப் பறக்கிறது. பாண்டிச்சேரியில் வரும் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல்
என்பதால் அவசரமாக முடிவெடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டசபை
தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் யார்
தலைமையில் கூட்டணி என்று திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் போட்டி நிலவுகிறது.
30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் கூட்டணிக்கான தலைமை யார் என்பதிலும், யாருக்கு எவ்வளவு
தொகுதிகள் என்பதிலும் தொடர்ந்து இரு கட்சிகள் இடையே மோதல் நீடித்து வருகிறது.
புதுச்சேரியில் கடந்த தேர்தலைப்போல அதிக தொகுதிகளில் போட்டியிட
காங்கிரஸ் விரும்புகிறது. அங்கு 18 – 20 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் முனைப்பு
காட்டுகிறது. ஆனால், அங்கு 6 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும்
திமுக தங்கள் தலைமையிலே கூட்டணி அமைய வேண்டும் எனக் கூறி வருகிறது. கடந்த 2021 புதுச்சேரி
சட்டப்பேரவைத் தேர்தலில் 15 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே
வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலும் தொகுதிகள் பஞ்சாயத்து எகிறியுள்ளது கடந்த 2021 சட்டசபை
தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் காங்கிரஸ்
வென்றது. கடந்த முறை வென்ற 18 தொகுதிகளும் மீண்டும் தங்களுக்கு வேண்டும் எனவும், மீதமுள்ள
10 தொகுதிகள் தொடர்பான பட்டியலையும் காங்கிரஸ் கட்சி வழங்கி உள்ளது. ஆனால் திமுக
கடந்த முறை வென்ற 18 தொகுதிகளில் 11 தொகுதிகளை தருகிறோம். 7 தொகுதிகளை கேட்குறது.
குறிப்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருக்கும் விருத்தாச்சலம், ஊட்டி,
அறந்தாங்கி, நாங்குநேரி, சிவகாசி, தென்காசி, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட சட்டசபைத் தொகுதிகளை
திமுக கேட்கிறது. இந்த தொகுதிகளில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களின் செயல்பாடு சரியில்லை
என்று ஆதாரங்களை திமுக காட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியினால்தான் கம்யூனிஸ்ட், திருமா கட்சிகள் அதிகம்
கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். இன்னமும் முரண்டு பிடித்தால் கழுத்தைப் பிடித்து வெளியே
அனுப்புங்கள் என்று திமுகவினர் கொதிக்கிறார்கள்.
