Share via:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்குமான வார்த்தை போர் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் மூக்கை நுழைத்துள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தன்னை விமர்சித்த நிலையில் அதற்கும் பதிலடி கொடுத்துள்ளார் அண்ணாமலை.
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை ரவுடி என்று பேட்டி அளித்தார் அண்ணாமலை. இதற்கு பதிலடி கொடுத்த செல்வப்பெருந்தகை, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் குதிப்பார்கள் என்று தெரிவித்ததோட போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளார்.
இந்தநிலையில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட டி.ஜெயக்குமாரின் செய்தியாளர்கள் சந்திப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதில், அண்ணாமலை ஒரு வேதாளம் அவர் தற்போது அ.தி.மு.க.வை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறியுள்ளார் என்று விமர்சனம் செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்ணாமலை பேசியிருப்பது தற்போது அரசியல்களத்தில் பரபரப்பபை ஏற்படுத்திள்ளது.க்ஷ
அவர் பேசும்போது, தமிழ்நாட்டில் பல பேய்கள் உள்ளன. இந்த வேதாளம் வந்ததே ஒவ்வொரு பேயாக ஓட்டத்தான். இந்த பேயை ஓட்டுவிட்டு அந்த பேய்க்கு வருகிறேன். இத்தனை பேய் இருப்பதால் ஒரே நேரத்தில் செல்ல முடியாது. ஒவ்வொரு பேயாகத்தான் செய்று வர முடியும்.
இந்த பேய்கள் அனைத்தும் தமிழக மக்களை பிடித்துள்ள பீடைகள் போன்றது. தமிழகத்தில் கடந்த 70 ஆண்டு காலமாக வளர்ச்சி இல்லாமல் வறுமை கோட்டில் வைத்துள்ளதாக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை நான் முன்னாள் ரவுடி என்று சொன்னதற்கான தரவுகளை வெளியிட்டுள்ளேன். அதே போல் அவர் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டது பொய்யா என்று கேள்வி எழுப்புள்ளார்.
எல்லாவற்றுக்கும் மேலாக செல்வப்பெருந்தகை குறித்த எனது கருத்துக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் எனக்கு தொலைபேசி வாயிலாக என்னை தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்து வருகின்றனர் என்று அண்ணாமலை பரபரப்பாக பேசியுள்ளார்.