Share via:
ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.
ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் வருகிற இம்மாதம் (நவம்பர்) நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் மற்றும் இதர பிற கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன.
ஒருபுறம் தேர்தல் பிரசாரத்துடன் சேர்த்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அதன்படி காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் மாநிலத்தில் 21 காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
உதய்புர்வடி தொகுதியில் பகவான் ராம் சைனியும், கெட்ரி தொகுதியில் மனிஷா குர்வார் போட்டியிடுகிறார். அதேபோல் தோட் தொகுதியில் ஜகதீஷ் டனோடியாவும், ஜோத்வாரா தொகுதியில் அபிஷேக் சவுத்ரியும், சக்சு தொகுதியில் வேத் பிரகாஷ் சோலான்கி போட்டியிடுகிறார்கள்.
கமன் தொகுதியில் சாஹிதா கான், பாரி தொகுதியில் பிரசாந்த் சிங் பர்மர், தோடாபிம் தொகுதியில் கன்ஷியாம் மெகர், அஜ்மீர் (வடக்கு) தொகுதியில் மகேந்திரசிங் ராலாவாடா போட்டியிடுகின்றனர்.
நாகபூர் தொகுதியில் ஹரேந்திர மிர்தா, கின்வ்சார் தொகுதியில் தேஜ்பால் மிர்தா போட்டியிடும் நிலையில், சுமேர்புர் தொகுதியில் ஹரி சங்கர் மெவேரா போட்டியிடுகிறார். குதாமலானி தொகுதியில் சோனா ராம் சவுத்ரியும, சித்தோர்கர் தொகுதியில் சுரேந்திர சிங் ஜடாவாட், ஷாபுரா தொகுதியில் நரேந்திரகுமார் ரெய்கர், பிபால்டா தொகுதியில் சேத்தன் பட்டேல், கொடா (வடக்கு) தொகுதியில் சாந்தி தாரிவால் போட்டியிடும் நிலையில், கோடா (தெற்கு) தொகுதியில் ராகி கவுதம் போட்டியிடுகின்றனர்.
ராம்கஞ்ச் மண்டி தொகுதியில் மகேந்திர ராஜோரியாவும், கிஷான்கஞ்ச் தொகுதியில் நிர்மலா சகாரியாவும், ஜல்ராபதான் தொகுதியில் ராம்லால் சவுதானும் போட்டியிடுகின்றனர்.