News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பரப்புரையாற்ற உள்ளார்.

 

சத்தீஸ்கர், மிசோரம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வருகிற நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் நிச்சயமாக அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் அதிரடியாக தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளன.

 

அந்த வகையில் 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்திற்கு வருகிற நவம்பர் மாதம் 25ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.  வாக்கு எண்ணிக்கையும் தேர்தல் முடிவுகளும் வருகிற டிசம்பர் மாதம் 3ம் தேதி நடைபெற உள்ளது.

 

இன்று (அக்.20) காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ராஜஸ்தானில் நடைபெற உள்ள தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இக்கூட்டத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஏ.ஐ.சி.சி. பொறுப்பாளர் சுக்ஜிந்தர்சிங் ரந்தாவா, முதல்வர் அசோக் கெலாட், பிசிசி தலைவர் கோவிந்த் சிங் தோஸ்தாரா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

 

தேர்தல் பிரசாரத்தின் போது பேரணியில் கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டம் குறித்து பிரியங்கா காந்தி உரையாற்றுவார் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link