News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25ம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நாள் நெருங்குவதால் ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுவதால் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

அதன்படி ராஜஸ்தான் மாநிலம் கரன்பூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த குர்மீத் சிங் கூனர் உடல்நல குறைவு காரணமாக கடந்த 12ம் தேதி தீபாவளி பண்டிகையின் போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக நோய் மற்றும் உயர்ரத்த அழுத்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அவர் பலனின்றி உயிரிழந்ததாக உயிரிழந்ததாக மருத்துவமனை வழங்கிய இறப்பு சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே கரன்பூரின் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருந்த குர்மீத் சிங் கூனர் திடீரென் உயிரிழந்துள்ளதால், அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே காலியாக உள்ள கரன்பூரில் காங்கிரஸ் வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அத்தொகுதி காங்கிரஸ் பிரமுகர்கள் இடையே கடும் போட்டி நிலவுவதாக தெரியவந்துள்ளது.

 

குர்மீன்சிங் கூனர் மறைவுக்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link