Share via:
தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ராகுல்
காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி டக் அவுட் ஆகியிருக்கிறது. இதனால் கடுமையான வருத்தத்தில்
இருக்கும் ராகுல் காந்திக்கு ஆறுதல் கொடுப்பது போல் செய்தி வந்திருக்கிறது. அதாவது,
டெல்லியில் போட்டியிட்ட 70 தொகுதிகளிலும் சேர்த்து ஐந்தாயிரம் ஓட்டுக்கள் கூட கம்யூனிஸ்ட்
கட்சிகள் வாங்கவில்லை என்பது தான் அந்த ஆறுதல் செய்தி.
இந்திய அரசியலை புரட்டிப்போட கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே முடியும்
என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் வீரவசனம் பேசுகிறார்கள். ஆனால், மக்களோடு மக்களாக களத்தில்
நிற்கவும் செய்யாமல், புதிய உறுப்பினர்களை கட்சிக்குல் இழுக்க முடியாமல் தடுமாறி வருவது
டெல்லி தேர்தலில் அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது. டெல்லியில் போட்டியிட்ட மூன்று கம்யூனிஸ்ட்
கட்சிகளும் படு மோசமான தோல்வியைத் தழுவியிருக்கின்றன. தோல்வி அடைவது தெரிந்தும் போட்டியிட்டது
வீரம் என்றாலும், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட மறுத்தது ரொம்பவும் மோசமான
தோல்வியைக் கொடுத்திருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட்ட இடங்கள் – 5
1. பாலம் தொகுதி பாஜக வெற்றி – 82046 இந்திய கம்யூனிஸ்ட் –
326 நோட்டா – 1119
2. ஆதர்ஷ் நகர் தொகுதி பாஜக வெற்றி – 52510 இந்திய கம்யூனிஸ்ட்
– 133 நோட்டா – 377
3. வாசிர்பூர் தொகுதி பாஜக வெற்றி – 54721 இந்திய கம்யூனிஸ்ட்
– 190 நோட்டா – 652
4. விகாஷ்புரி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் – 580 நோட்டா – 1127
5. ஒக்லா தொகுதி ஆம் ஆத்மி வெற்றி – 88943 பாஜக – 65304 இந்திய
கம்யூனிஸ்ட் – 259 நோட்டா – 604
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிட்ட இடங்கள் – 2
1. கரவால்நகர் தொகுதி பாஜக வெற்றி – 107367 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
– 457 நோட்டா – 709
2. பாதர்பூர் தொகுதி ஆம் ஆத்மி வெற்றி – 112991 பாஜக – 87103 மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் – 367 நோட்டா – 91
கம்யூனிஸ்ட் (ML) போட்டியிட்ட இடங்கள் – 2
1. நிரேலா தொகுதி பாஜக வெற்றி – 87215 கம்யூனிஸ்ட் (ML) – 328
நோட்டா – 981
2. கொண்ட்லி தொகுதி ஆம் ஆத்மி வெற்றி – 61792 பாஜக – 55499 கம்யூனிஸ்ட்
(ML) – 100 நோட்டா – 776
டெல்லி சட்டமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கூட்டணி போட்டியிட்ட மொத்தம்
9 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட நோட்டோவை வெற்றிகொள்ளவில்லை..! மீத முள்ள 61 தொகுதிகளில்
போட்டியிட ஆள் கிடைக்க வில்லை என்பது தான் பரிதாபம்.
இந்த விஷயம் தி.மு.க.வுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியாமப்
பாத்துக்கோங்க. அப்புறம் வசூல் வேட்டைக்கு ஆபத்து வந்துவிடும்.