Share via:
நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
நகைச்சுவை நடிகரான சின்னிஜெயந்த்தின் அனைத்து காமெடி காட்சிகளும் இன்றளவும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்தான். அதிலும் ராஜா சின்ன ரோஜா கூட்டம் திரைப்படத்தில் அவர் சொன்ன ‘‘ஹான்’’ டயலாக் எப்போதுமே டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.
கடந்த 2019ம் ஆண்டு நடிகர் சின்னிஜெயந்தின் மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்காக நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் ஸ்ருதன்ஜெய் நாராயணன் 75வது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றார்.
அதைத்தொடர்ந்து மத்திய அரசின் திறன் வளர்ப்பு சார் செயலாளராக பணியாற்றிக் கொண்டிருந்த அவர், தூத்துக்குடி பயிற்சி துணை ஆட்சியாராகவும் பணியாற்றி வந்தார். அதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியராக நியமிக்கப்பட்ட ஸ்ருதன்ஜெய் நாராயணன் தற்போது விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த தகவலை தெரிந்து கொண்ட சின்னி ஜெயந்தின் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.