News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கோவை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் ராகிங் கொடுமைக்கு ஆளான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கோவை தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவரை, சீனியர் மாணவர்கள் 8 பேர் சேர்ந்து ராகிங் என்ற பெயரில் கொடுமைப்படுத்திய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. ராகிங் காட்சிகள் வீடியோவாக வெளியாகி வைரலான நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

ராகிங்கால் பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், கோவை பீளமேடு போலீசார் கல்லூரிக்குள் அதிரடியாக புகுந்து 7 மாணவர்களை கைது செய்தனர். இவ்விவகாரத்தை தொடர்ந்து 7 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. ராகிங் குற்றம் சுமத்தப்பட்ட  மற்றொரு மாணவர் இன்னும் தலைமறைவாக உள்ள நிலையில் தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

இந்நிலையில் ராகிங் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 7 மாணவர்களும் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடிய நிலையில் இவ்வழக்கின் விசாரணை இன்று மேற்கொள்ளப்பட்டது. அதில் மாணவர்கள் 7  அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில் பேரும் 30 நாட்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link