Share via:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது.
தேர்தல் பரப்புரை சூடு பிடித்துள்ள நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், தமிழக தலைமைச்
செயலர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியை மாற்றி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை
மேற்கொண்டுள்ளது.
தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவர்தான் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தேர்தல்
நெருக்கத்தில் மாற்றம் நடந்துள்ளது.
புதிய தலைமைச் செயலராக சாய்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தமிழ்நாடு செய்திக் காகித நிறுவனத் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், இவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனிச் செயலாளராகவும் இருந்தவர்
என்பது குறிப்பிடத்தக்க்கது.
அதேபோல், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தையும்
மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு போடுள்ளது. சந்தீப்
மிட்டல்,
ஊழல் தடுப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்குநராகவும், ஆயுதக் காவல் படை டிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் டேவிட்சன் தேவசீர்வதத்திற்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட
அதிகாரிகள் பணியில் இணைந்தது குறித்த அறிக்கையை இன்று மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க
வேண்டும் என்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தலைமைச் செயலாளர் மாற்றம் திமுகவுக்கு பின்னடைவாகவும், அதிமுகவும்
வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. என்னமோ நடக்கிறது என்று திமுகவினர் திகிலில் உள்ளனர்.
