Share via:
வேர்ல்டு கராத்தே மாஸ்டர் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
உலகம் முழுவதும் 52 நாடுகளில் உறுப்பினர்களைக் கொண்டு உலகின் தலைசிறந்த கராத்தே மாஸ்டர் சங்கமாக விளங்கி வருவது வேர்ல்டு கராத்தே மாஸ்டர் அசோசியேஷன். கடந்த 4 ஆண்டுகளாக சேவை புரிந்து வரும் இதில் கடந்த 2 ஆண்டுகளாக கராத்தே மாஸ்டர்கள் மற்றும் வீரர்களை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
இவ்விழாவுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுனரான தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். பின்னர் சிறப்பாக செயல்பட்ட மாஸ்டர் மற்றும் வீரர்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் தனது கைகளால் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இந்த விருது வழங்கும் விழாவில் இந்தியா, வங்காளதேசம், சிங்கப்பூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.