Share via:
பாரா ஒலிம்பிக் போட்டித் தொடரில் வெற்றி பெற்ற தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிசில் நடந்து முடிந்த பாரா ஒலிம்பிக் போட்டித் தொடரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகளான துளசிமதி, நித்யஸ்ரீ, மணிஷா மற்றும் வீரரான மாரியப்பன் ஆகியோருக்கு மொத்தம் ரூ.5 கோடிக்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தமிழக அரசு விளையாட்டுத்துறையை மேம்படுத்தி, வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவித்து, பல்வேறு மாவட்டங்களில் விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வழங்கி மேம்படுத்தி வருகிறது. அதே போல் மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று திரும்பும் வீரர் மற்றும் வீராங்கனைகளை கவுரவித்து சான்றிதழ் வழங்குவதோடு, ஊக்கத்தொகை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.