Share via:
மறைந்த பங்காரு அடிகளாரில் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்திபீட நிறுவனர் பங்காரு அடிகளார் (வயது 82) நேற்று மாலை 5 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் உடல் மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.
பங்காரு அடிகளாரின் மறைவு செய்தியை கேட்ட சக்திபீட ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘‘அம்மா… அம்மா’’ என்று கண்ணீர் விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதோடு அனைத்து மாநிலங்களில் இருந்தும் அரசியல் கட்சித் தலைவர்கள், முதலமைச்சர்கள் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மறைந்த பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரின் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
அரசு மரியாதையுடன் பங்காரு அடிகளாரின் இறுதி நிகழ்வு இன்று மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. பக்தர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருவதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.