Share via:
பால்வளத்துறை சார்பில் ரூ.12 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
ஈரோட்டில் 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. அதே போல் திருநெல்வேலி மாவட்ட ஒன்றியத்தில் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி நிதியுதவியின் மூலம் கட்டப்பட்ட நூலகம், ஆய்வகம், விடுதி வசதியுடன் கூடிய பயிற்சி நிலைய கட்டிடங்கள் கட்டிமுடிக்கப்பட்டன.
அதேபோல் திருவண்ணாமலையில் 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பால் பவுடர் சேமிப்பு கிடங்கும், தருமபுரியில் அலுவலகத்துடன் கூடிய பால் கொள்முதல் பிரிவு கட்டிடம் உள்ளிட்டவற்றின் கட்டுமானப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டன. மேலும் திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியத்திற்கான அலுவலக கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் பால்வளத்துறை சார்பில் ரூ.12 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை திறந்துவைத்தார்.
கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.