Share via:
நாவலூர் சுங்கச்சாவடியில் இன்று முதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் நேற்று (அக்.18) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமலைநகரில் கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், துறை சாரந்த அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முடிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘பெருங்குடி சுங்கச்சாவடியில் சாலை பயன்பாட்டு கட்டணம் வசூலிப்பது, இந்த அரசு பதவி ஏற்றவுடன் கைவிடப்பட்டது என்று நினைவுகூர்ந்தார்.
அதேபோல் இதே சாலையில் அமைந்துள்ள நாவலூரில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று இன்று (அக்.19) முதல் நாவலூர் சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்படும் என்று தெரிவித்தார். முதலமைச்சரின் அறிவிப்பால் மக்கள் சுங்கக்கட்டணம் செலுத்தாமல் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.