News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் பதில் அளித்து பேசினார்.


இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக அ.தி.மு.க., காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. அப்போது பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அனைவருக்கும் 1,000 ரூபாய் வழங்குவதாக கூறிய வாக்குறுதி என்ன ஆனது என்று முதலமைச்சரை பார்த்து கேள்வி எழுப்பினார்.


இக்கேள்விக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 9 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். அவர்களில் தகுதியானவர்களுக்கு 1,000 ரூபாய் வழங்கப்படும். உரிமைத் தொகை திட்டத்தில் குறைகள் ஏதாவது இருந்தால் ஆதாரங்களுடன் கூறலாம்’’ என்று பதில் அளித்து பேசினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link