Share via:
மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இரண்டாம் ஆண்டு
தொடக்க விழா நடந்துவருகிறது. இந்த மாநாட்டில் முதன்முறையாக மேடை ஏறிய பிரசாந்த் கிஷோருக்கு
மாஸ் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு, அடுத்த ஆண்டு முதல்வர் ஆவார், அடுத்து இந்தியாவுக்கு
பிரதமர் ஆவார் என்று அவரது ரசிகர்கள் தெறிக்க விடுகிறார்கள்.
இன்றைய கூட்டத்தில் கட்சித்தலைவர் விஜய், பிரசாந்த் கிஷோர், தேர்தல்
பிரச்சார பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அழைப்பிதழ் கியில் வைத்திருந்த சுமார் 1,200 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். ஏராளமான
ரசிகர்கள் வாசலில் நின்றாலும் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
பீகாரின் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் இந்த விழாவில்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாநில, ஒன்றிய அரசுகளின் 5 கொள்கைகளை எதிர்த்து #Getout campaign-ஐ, விஜய் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். ஆனால், இந்த போர்டில்
பிரசாந்த் கிஷோர் கையெழுத்திடவில்லை.
இந்த விழாவில் முதல்கட்ட தமிழக சுற்றுப்பயணம் மற்றும் கூட்டணி போன்றவைகளை விஜய் பேசுவார்
என்று சொல்லப்படுகிறது.
இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜூனா, ‘’துணை முதலமைச்சர் ஆவதற்காக
விஜய் வரவில்லை. இவர் தான் நம்பர் ஒன். மக்கள் ஆதரவு இருந்ததாலே நம்பர் ஒன் ஆக இருக்கிறார்.
எங்கள் கட்சி ஆட்கள் மீது பொய் வழக்கு போடுவதை நிறுத்துங்கள். போலீஸைப் பார்த்து நாங்கள்
பயப்படவில்லை. சிறைக்கும் போவோம், ஜார்ஜ் கோட்டைக்கும் போவோம். ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு
10 ஆயிரம் ரூபாய் புடுங்குகிறீர்கள்’’ என்று பேசினார்.
பிரசாந்த் கிஷோர் இங்கு வந்ததைக் கண்டு அத்தனை பேரும் அரண்டு நிற்கிறார்கள்.
அறிவாளிகள் எல்லாம் சரியான இடத்துக்கு வந்திருக்கிறார்கள். ஜான் ஆரோக்கியசாமி, பிரசாந்த்
கிஷோர், ஆதவ் அர்ஜுனா ஆகிய மூன்று பேர் சேர்ந்து வேலை செய்யப் போகிறார்களாம். நல்லா
இருந்தால் சரிதான்.