News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனை முகாமில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

தி.மு.க.வின் இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், விளையாட்டுத்துறை மட்டுமல்லாது அனைத்து துறையிலும் கவனம் செலுத்தி கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி வருகிறார்.

 

அந்த வகையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம், விளையாட்டு போட்டி என தி.மு.க. சார்பில் பல நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரகிறது.

 

இந்நிலையில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 18 தொடர் மருத்துவ பரிசோதனை முகாம்களின், முதல் நிகழ்ச்சியை சென்னை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் நடைபெற்ற இம்முகாமில் தூய்மைப்பணியாளர்கள் கலந்து கொண்டு மருத்துவ வசதிகளை பெற்றனர். அவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களுடன் உரையாற்றினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link